331,000 மாணவர்களின் உரிமை மீறல்; மின் வெட்டுக்கு மின்சார சபைக்கு அனுமதியில்லை

- மின்வெட்டு அமுல்படுத்தினால் தெரியப்படுத்துங்கள்
- WhatsApp: +94775687387 | e-Mail: [email protected] | Fax: 0112392641

க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் 331,000 மாணவர்களின் உரிமைகளை மீறுவதாலும் அவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாலும், இ.மி.சபையினால் முன்வைக்கப்பட்டுள்ள மின்வெட்டு முகாமைத்துவ திட்டத்தை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு நிராகரித்துள்ளது.

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஆணைக்குழு விடுத்துள்ள அறிவித்தலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

க.பொ.த. உயர்தரப் பரீட்சை நடைபெறும் 2023 ஜனவரி 26 ஆம் திகதி முதல் 2023 பெப்ரவரி 17 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இலங்கையின் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவால் திட்டமிட்ட மின் வெட்டுக்கான அனுமதி வழங்கப்படவில்லை. அவ்வாறு அனுமதி வழங்கப்படாத மின் வெட்டுக்கு பாவனையாளர்கள் முகம் கொடுத்தால், இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு எழுத்துபூர்வமாக பின்வரும் பின்வரும் தொடர்பாடல் முறைகள் மூலம் முறைப்பாடுகளை சமர்ப்பிக்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

WhatsApp          : 0775687387
மின்னஞ்சல்   : [email protected]
தொலைநகல் :
0112392641


Add new comment

Or log in with...