திருமலையில் 'வாசல் கவிதை' சஞ்சிகை வெளியீடு

வாசல் வாசகர் வட்டத்தின் வெளியீடான 'வாசல் கவிதை' சஞ்சிகை கடந்த வாரம் திருகோணமலை நகராட்சிமன்ற பொதுநூலக கேட்போர் கூடத்தில் வாசல் வாசகர் வட்டத்தின் தலைவரும், ஊடகவியலாளருமான அரசரத்தினம் அச்சுதன் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு ஆசியுரையை திருகோணமலை ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தானத்தின் பிரதமகுரு சோ.இரவிச்சந்திர குருக்கள் வழங்கினார். பிரதம விருந்தினராக உள்ளூராட்சி உதவி ஆணையாளர் சூ.பார்த்தீபன் கலந்து கொண்டதுடன், சிறப்பு விருந்தினராக தமிழ்நாட்டின் 'நந்தவனம்' சஞ்சிகையின் ஆசிரியர் நந்தவனம் சந்திரசேகரன் பங்கேற்றார். கௌரவ விருந்தினராக மூத்த கவிஞர் அம்.கௌரிதாசன் கலந்து கொண்டார்.

நிகழ்வில் வரவேற்புரையை பா.விபூஷிதன் (ஊடகவியலாளர்) நிகழ்த்தினார். 'வாசல்' சஞ்சிகையின் பிரதம ஆசிரியர் ச. திருச்செந்தூரன், கவிஞர் யோகானந்தம் ஆகியோர் கருத்துரை வழங்கியிருந்தனர். அதனைத் தொடந்து நன்றியுரையை எ. தவப்பிரியா (செயலாளர், ஆதிபராசக்தி அரபணி மையம்) வழங்கியிருந்தார்.

மலைமுரசு பத்திரிகையின் பிரதம ஆசிரியர் இ.நா. ஸ்ரீஞானேஸ்வரன், தமிழகத்தின் முன்னணி எழுத்தாளர்கள் மற்றும் ஈழத்து எழுத்தாளர்கள் உட்பட இந்நிகழ்வில் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது 'வாசல்' சஞ்சிகையின் பிரதம ஆசிரியர் ச. திருச்செந்தூரன் கௌரவிக்கப்பட்டதுடன், தமிழ்நாட்டின் நந்தவனம் சஞ்சிகையின் ஆசிரியர் நந்தவனம் சந்திரசேகரன், திருகோணமலை அன்புவழிபுரத்தை சேர்ந்த நாடகக்கலைஞர் சிவநாமம் ஜெயராசா ஆகியோர் கலைக்கேசரி விருது வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பாலேந்திரலிங்கம் விபூஷிதன்...

(திருகோணமலை)


There is 1 Comment

Add new comment

Or log in with...