எவோட்ஸ் - 2023 அறிவிப்பாளர் போட்டி

புதிய அலை கலை வட்டம் வருடாந்தம் நடத்தும் எவோட்ஸ்-2023 கலை, கலாசாரப் போட்டித் தொடரின் மூன்றாவது போட்டியாக அறிவிப்பாளர் போட்டி நடைபெற ஏற்பாடாகியுள்ளது.

இப் போட்டி நேரடிப் போட்டியாக நடைபெறவுள்ளது. இதில் கலந்து கொள்ள விரும்வோருக்கான நிபந்தனைகள் வருமாறு:-

 1. போட்டியாளர் 18 வயது முதல் 35 வயதுக்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும்.
 2. போட்டி நடைபெறும் தினம் முன்கூட்டி அறிவிக்கப்படும் அத்தினத்தில் தவறாது நேரடியாகப் பங்கேற்கவேண்டும்.ஹட போட்டியில் பங்கேற்பதற்குரிய விடயதானங்கள் அன்றைய தினமே வழங்கப்படும் துறைசார்ந்த மூவர் நடுவர்களாக கலந்து கொள்வர்.
 3. அறிவிப்பாளர் போட்டியின் முடிவுகள் அன்று அறிவிக்கப்படும்
 4. அத்துடன் எவோட்ஸ்-2023க்கான கவிதை மற்றும் சிறுகதைப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பணப்பரிசும் சான்றிதழும் அன்று வழங்கப்படும்.அறிவிப்பாளர் போட்டியில் நேரடியாக கலந்து கொள்வோருக்கு எதுவித கொடுப்பணவுகளும் வழங்கப்படமாட்டாது. வெற்றிபெற்றவர்களுக்கு மட்டும் பணப்பரிசும் சான்றிதழும் வழங்கப்படும்
 5. விண்ணப்பங்கள் மே 05 வரை மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.
 • முதலாம் பரிசு - 10.000 ரூபா- சான்றிதழ்
 • இரண்டாம் பரிசு – 7.500ரூபா- சான்றிதழ்
 • மூன்றாம்; பரிசு – 5.000ரூபா- சான்றிதழ்

மேலதிகத் தொடர்புகளுக்கும் விண்ணப்பத்திற்கும்

 • [email protected]
 • மற்றும் whatsapp மூலம் - 075 4880172
 • தொலைபேசி தொடர்புக்கு: 076 2002701, 077 6274099,.077 7412604-0ன, 077 7111905

There is 1 Comment

Add new comment

Or log in with...