விபத்தில் பாடசாலை மாணவன் பலி

வீதி விபத்தில் பாடசாலை மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்து, ஹெட்டிபொல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொலமுனஓயா பகுதியில் நேற்று (04) இடம்பெற்றுள்ளது.

குருணாகலில் இருந்து சிலாபம் நோக்கி பயணித்த பஸ் மீது எதிர் திசையில் இருந்து வந்த மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை மீறி மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் காயமடைந்த மோட்டார் சைக்கிள் செலுத்துனர் மற்றும் பின் ஆசனத்தில் பயணித்த மாணவனும் காயடைந்து ஹெட்டிபொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

பின்னர் மேலதிக சிகிச்சைக்காக குளியாபிட்டி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட வேளையில், மாணவன் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த விபத்தில் ஹிலோகம, நிகவெரட்டிய பிரதேசத்தில் வசிக்கும் 16 வயதுடைய பாடசாலை மாணவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அக்குறணை குறூப் நிருபர்
 


Add new comment

Or log in with...