இன்று முதல் கொத்து, பிரைட் ரைஸ் விலைகள் 10% இனால் குறைப்பு

இன்று (05) முதல் அமுலுக்கு வரும் வகையில் கொத்து, பிரைட் ரைஸ் ஆகியவற்றின் விலைகளை 10% இனால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் இதனை அறிவித்துள்ளது.

சமையல் எரிவாயு உள்ளிட்டவற்றின் விலை குறைப்பைத் தொடர்ந்து, அதன் நிவாரணத்தை வாடிக்கையாளருக்கும் வழங்கும் வகையில் குறித்த விலைகளை குறைக்க தீர்மானித்ததாக, அச்சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.


Add new comment

Or log in with...