வலம்புரி கவியரங்கம்

வலம்புரி கவிதா வட்டத்தின் கவியரங்கம் எதிர்வரும் 13ம் திகதி  ஞாயிற்றுக்கிழமை காலை 10  மணிக்கு கொழும்பு பழைய நகர மண்டப வெளியரங்கில் நடைபெறவுள்ளது.

வலம்புரி கவிதா வட்டத்தின் இந்த 61ஆவது கவியரங்கம்     சிரேஷ்ட எழுத்தாளர் எஸ். ஐ. நாகூர் கனி   தலைமையில் நடைபெறும்.

இதேவேளை, வலம்புரி கவிதா வட்டத்தின் 60ஆவது கவியரங்கம் கடந்த பௌர்ணமி தினத்தன்று       கொழும்பு, பழைய நகர மண்டபத்தில் நடைபெற்றது நிகழ்வுகளை வகவ தலைவர் என். நஜ்முல் ஹுசைன் நெறிப்படுத்தினார்.

கவியரங்கம் கலாநிதி சசாங்கன் சர்மா தலைமையில் நடைபெற்றதுடன்   கவியரங்கில் கவிஞர்கள் எம்.  பாலகிருஷ்ணன், எம். எஸ்.  தாஜ்மஹான்,  கம்பளை ரா.  சேகர்,  கஸ்ஸாலி அஷ்ஷம்ஸ், மஸீதா அன்சார்,  கல்முனை முபாரக் எம். இம்தியாஸ் உள்ளிட்ட பலர் கவிதை பாடினர்.(ஸ)


There are 4 Comments

Add new comment

Or log in with...