லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர் விலைகள் மீண்டும் குறைகின்றன

- தொடர்ச்சியாக 4ஆவது முறையாக குறைக்க நடவடிக்கை

லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை மீண்டும் குறைக்கப்படவுள்ளதாக, லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய எதிர்வரும் ஜூலை மாத ஆரம்பத்தில் விலைச்சூத்திரத்திற்கு அமைய, மீண்டும் லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர் விலைகள் குறைக்கப்படவுள்ளதாக, அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய, கடந்த ஏப்ரல், மே, ஜூன் மாதங்களை அடுத்து, இது லிட்ரோ இந்நிறுவனம் தொடர்ச்சியாக நான்காவது தடவையாக மேற்கொள்ளும் விலை குறைப்பாக அமையவுள்ளதாக, அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த ஜூன் 05ஆம் திகதி முதல் லிட்ரோ எரிவாயு விலைகள் பின்வருமாறு குறைக்கப்பட்ருந்தன.

 • 12.5kg: ரூ. 3,638 இலிருந்து ரூ. 3,186 ஆக ரூ. 452 இனால் குறைப்பு
 • 5kg: ரூ. ரூ. 1,462 இலிருந்து ரூ. 1,281 ஆக ரூ. 181 இனால் குறைப்பு
 • 2.3kg: ரூ. 681 இலிருந்து ரூ. 598 ஆக ரூ. 83 இனால் குறைப்பு

கடந்த மே 04ஆம் திகதி பின்வருமாறு லிட்ரோ சமையல் எரிவாயு விலைகள் குறைக்கப்பட்டிருந்தன.

 • 12.5kg: ரூ. 3,738 இலிருந்து ரூ. 3,638 ஆக ரூ. 100 இனால் குறைப்பு
 • 5kg: ரூ. ரூ. 1,502 இலிருந்து ரூ. 1,462 ஆக ரூ. 40 இனால் குறைப்பு
 • 2.3kg: ரூ. 700 இலிருந்து ரூ. 681 ஆக ரூ. 19 இனால் குறைப்பு

கடந்த ஏப்ரல் 05ஆம் திகதி பின்வருமாறு லிட்ரோ சமையல் எரிவாயு விலைகள் குறைக்கப்பட்டிருந்தன.

 • 12.5kg: ரூ. 4,743 இலிருந்து ரூ. 3,738 ஆக ரூ. 1,005 இனால் குறைப்பு
 • 5kg: ரூ. ரூ. 1,904 இலிருந்து ரூ. 1,502 ஆக ரூ. 402 இனால் குறைப்பு
 • 2.3kg: ரூ. 883 இலிருந்து ரூ. 700 ஆக ரூ. 183 இனால் குறைப்பு

கடந்த மார்ச் மாதம் விலைச்சூத்திரத்திற்கமைய, லிட்ரோ சமையல் எரிவாயு விலைகளில் எவ்வித திருத்தங்களும் மேற்கொள்ளப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த பெப்ரவரி 06ஆம் திகதி பின்வருமாறு லிட்ரோ சமையல் எரிவாயு விலைகள் அதிகரிக்கப்பட்டிருந்தன.

 • 12.5kg: ரூ. 4,409 இலிருந்து ரூ. 4,743 ஆக ரூ. 334 இனால் அதிகரிப்பு
 • 5kg: ரூ. 1,770 இலிருந்து ரூ. 1,904 ஆக ரூ. 134 இனால் அதிகரிப்பு
 • 2.3kg: ரூ. 822 இலிருந்து ரூ. 883 ஆக ரூ. 61 இனால் அதிகரிப்பு

லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர்களின் தற்போதைய விலைகள்


Add new comment

Or log in with...