நுரைச்சோலை அனல்மின் நிலைய 3ஆவது மின்னுற்பத்தி தொகுதி செயலிழப்பு

- மின் வெட்டு அமுல்படுத்தப்படாது; தொடர்ச்சியாக மின்சாரம் வழங்க நடவடிக்கை

நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் 3ஆவது மின்னுற்பத்தி தொகுதியில் திடீரென கோளாறு ஏற்பட்டுள்ளதாக, மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இலங்கை மின்சார சபை இது தொடர்பில் தமக்கு அறிவித்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

ஏப்ரலில் முழுமையான பழுதுபார்க்கும் பராமரிப்புக்கு உட்படுத்தப்படவிருந்த நிலையிலேயே குறித்த மின்னுற்பத்தி தொகுதி செயலிழந்துள்ளதாக அவர் தனது ட்விட்டர் கணக்கில் குறிப்பிட்டுள்ளார்.

 

 

ஆயினும் தடையில்லா மின்சாரத்தை உறுதி செய்ய, மின்சார சபைக்குச் சொந்தமான டீசல் உள்ளிட்ட எரிபொருள் மின்னுற்பத்தி நிலையங்கள் பயன்படுத்தப்படுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆயினும் இதன் காரணமாக மின்வெட்டு அமுல்படுத்தப்படாது எனவும் அமைச்சர் கஞ்சன விஜேசேகர சுட்டிக்காட்டியுள்ளார்.


Add new comment

Or log in with...