- இன்றையதினம் 3 மணி நேர மின்வெட்டு
- நாளை முதல் 2 மணி 20 நிமிடமாக பேணப்படும்
பழுதடைந்துள்ள நுரைச்சோலை அனல்மின் நிலையம் வழமைக்கு வரும் வரை தனியாரிடமிருந்து மின்சாரத்தை கொள்வனவு செய்ய, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) அனுமதி வழங்கியுள்ளதாக, மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
தனது ட்விட்டர் கணக்கில் இது தொடர்பில் பதிவிட்டுள்ள அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
PUCSL has granted approval for CEB to purchase power from Private Plants until Norochcholai Power Plant is restored & CPC will provide the necessary Diesel, Naphtha & Furnace Oil requirements to CEB to maintain the power generation without extending the power cuts from tomorrow.
— Kanchana Wijesekera (@kanchana_wij) September 27, 2022
நாளை (28) முதல் மின்வெட்டை மேலும் நீடிக்காது பேணும் வகையில், மின் உற்பத்திக்கு தேவையான டீசல் உள்ளிட் ஏனைய (Naphtha, Furnace) எரிபொருள் தேவைகளை இலங்கை மின்சார சபைக்கு, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் வழங்குமென அறிவிக்கப்பட்டுள்ளது
அதற்கமைய, இன்றையதினம் 3 மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்தப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, நாளை (28) முதல் 2 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களாக மின்வெட்டை பேண நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் 3ஆவது மின்னுற்பத்தி தொகுதி செயலிழந்துள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Add new comment