கைதான நதாஷாவிற்கு ஜூன் 07 வரை விளக்கமறியல்

நிகழ்ச்சியொன்றில், பௌத்த மதத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டதாக தெரிவித்து கைது செய்யப்படட்ட, மேடை நகைச்சுவை கலைஞரான (Standup Comedian) நதாஷா எதிரிசூரியவை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் நேற்று முன்தினம் (27) சனிக்கிழமை இரவு, சிங்கப்பூர் நோக்கி செல்லவிருந்த வேளையில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில், குற்றப் புலனாய்வு திணைக்கள (CID) அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

'மோடாபிமானய' (முட்டாள்தனமான பெருமை) எனும் பெயரில் அண்மையில் கொழும்பில் உள்ள பிரபல அரங்கு ஒன்றில் அவரால் நிகழ்த்தப்பட்ட நகைச்சுவை நிகழ்ச்சியில் பௌத்த மதத்தை அவமதிக்கும் வகையில் பல கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரின் வாக்குமூலங்களைப் பதிவு செய்த குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நேற்றை பிற்பகல் (28) அவரை கொழும்பு கோட்டை நீதவான் திரு திலிண கமகே முன்னிலையில் ஆஜர்படுத்தியிருந்தனர்.

இதன்போது, சந்தேகநபர் பௌத்தம் மற்றும் கலாசாரத்தை அவமதிக்கும் வகையிலும் கருத்து வெளியிட்டதன் மூலம், மக்கள் மத்தியில் ஒற்றுமையின்மையை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டுள்ளதாக, குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் தெரிவித்திருந்ததனர்.

இதன்படி, முன்வைக்கப்பட்ட விடயங்களை பரிசீலித்த கொழும்பு கோட்டை நீதவான் சந்தேகநபரை எதிர்வரும் ஜூன் 07ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.


Add new comment

Or log in with...