சிநேகம் மீண்டும் வளர பங்களித்த அனைவருக்கும் தோமாவின் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம் நன்றி

கடந்த 2018 இல் மலர்ந்த சிநேகம் மீண்டும் வளரக் காரணமாக இருந்த அனைத்து அன்புள்ளங்களையும் நன்றியுடன் நினைவு கூர்ந்து, தமிழ் இலக்கிய மன்றத்தின் தலைவர் என்னும் வகையில் உங்களுடன் ஒரு சில விடயங்களைப் பகிர்ந்த கொள்ள உள்ளேன். இனஒற்றுமைக்குச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கும் இத்தகைய நிகழ்வுகள் இலங்கையின் பல்லின பாடசாலைகள் அனைத்திலும் இடம்பெற வேண்டும்.

கலைகளின் முன் இன, மொழி, மத, பேதம் இல்லை என்பதை நிரூபிக்க இன்று இங்கு இணைந்து செயற்பட்டு வரும் இளம் தோமியர்களுக்கு எனது வாழ்த்துக்கள். நாட்டின் இடர்கால சூழ்நிலையைக் கருத்திற் கொண்டு குறுகிய காலத்தில் சபையினரை மகிழ்விக்கும் முகமாக கலை நிகழ்வுகளை தருவதற்கு மாணவர்கள் தயாராக உள்ளனர். இந்நிகழ்வுகள் சிறப்பாக நடைபெறுவதற்கு எமக்கு என்றும் துணை நிற்கும் பாடசாலை அதிபர் வணபிதா மார்க் பிளிமோரியா, உபஅதிபர் அசங்க பெரேரா, பொறுப்பாசிரியர் திருமதி ஜி. பாலதயாளளன், திருமதி ப. அன்பழகன், திருமதி ஜெ. ஷாமிலி மற்றும் இவர்களுடன் துணைநின்று செயற்பட்டு வரும் பாடசாலையின் நிர்வாகத் தலைவர், உதவிக்கரம் நீட்டி வரும் அனுசரணையாளர்களுக்கும் கலை நிகழ்ச்சிகளை பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். அதுமட்டுமல்லாது பெற்றோர் தமது பிள்ளைகளைச் சலிப்பின்றி தொடர்ந்து பயிற்சிக்காக அனுப்பியுள்ளனர். அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை கூறிக் கொள்கின்றேன். மேலும் எத்தனை இடர்கள் ஏற்படினும் சளைக்காது, முகம் கொடுப்போம் என்று எம்முடன் இணைந்து நிற்கும் நமது நண்பர்களுக்கும், முக்கியமாகச் சிங்கள இலக்கிய மன்ற நண்பர்களின் நட்புரீதியான ஒத்துழைப்புக்கும் நன்றி கூறுகிறேன்.

--அபிக்ஷரன்...

தலைவர், பரிதோமாவின் கல்லூரி

தமிழ் இலக்கிய மன்றம்


Add new comment

Or log in with...