14 நாள் கால அவகாசத்துக்குள் வழங்காவிடின் அனுமதிகள் இரத்து

நாட்டிலுள்ள பிரதான மதுபான உற்பத்தி நிறுவனங்கள் அரசாங்கத்திற்கு 6. 2 பில்லியன் ரூபாவை வரியாக செலுத்த தவறியுள்ளதாகவும், வழங்கப்பட்டுள்ள கால அவகாசத்தில் உரிய வரியை செலுத்த தவறினால் அந் நிறுவனங்களின் அனுமதிப்பத்திரங்களை இரத்து செய்யத் தீர்மானித்துள்ளதாகவும் கலால் திணைக்களம் அறிவித்துள்ளது.

கடந்த வாரம் முதல் நடைமுறைக்கு வரும் வகையில் மேற்படி வரியை செலுத்துவதற்காக 14 நாட்கள் கால அவகாசத்தை காலால் திணைக்களம் வழங்கி யிருந்தது. அந்த வகையில் குறித்த 14 நாட்களுக்குள் வரி நிலுவையை வழங்கத் தவறினால், மேற்படி மதுபான நிறுவனங்களின் அனுமதி பத்திரங்களை இரத்துச் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

அந்த வகையில் அந்த திணைக்களத்தின் புள்ளி விபரங்களுக்கிணங்க மேற்படி நிறுவனங்கள் 2.5 பில்லியன் ரூபாவை வரி நிலுவையாகவும் தாமதக்கட்டணமாக 3.8 பில்லியன் ரூபாவையும் வழங்க வுள்ளதாகவும் கணக்கிடப்பட்டுள்ளது.

(லோரன்ஸ் செல்வநாயகம்)


Add new comment

Or log in with...