உலக வங்கியிடமிருந்து 250 மில். அமெரிக்கன் டொலர்

இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவிப்பு

உலக வங்கி 250 மில்லியன் அமெரிக்கன் டொலர்களை இலங்கைக்கு நிதியுதவியாக வழங்கியுள்ளதென நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

உலக வங்கியானது இலங்கைக்கு 700 மில்லியன் அமெரிக்கன் டொலர்களை வழங்குவதற்கான அனுமதியை வழங்கியிருந்தது. இதன் முதற்கட்டமாகவே மேற்படி 250 மில்லியன் அமெரிக்கன் டொலர்களை உலக வங்கி வழங்கியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அதற்கிணங்க இலங்கைக்கு 500 மில்லியன் அமெரிக்கன் டொலர்களை வரவு செலவு திட்ட ஒத்துழைப்புக்காகவும் மேலும் 200 மில்லியன் அமெரிக்கன் டொலர்களை சமூக நலன்புரி நடவடிக்கை களுக்காகவும் வழங்குவதற்கு உலக வங்கி அனுமதி வழங்கியிருந்தது.

அதில் வரவு செலவுத் திட்ட ஒத்துழைப்புக்காக ஒதுக்கப்பட்டிருந்த நிதியிலிருந்து முதற்கட்டமாக 250 மில்லியன் அமெரிக்க டொலர்களை உலக வங்கி இலங்கைக்கு வழங்கியுள்ளது.

இத்தகவலை இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தமது ட்யூட்டரில் பதிவிட்டுள்ளார்.

 

 

(லோரன்ஸ் செல்வநாயகம்)

 


Add new comment

Or log in with...