கொழும்பு பங்குச் சந்தை சுட்டெண் நேற்று அதிகரிப்பு

முன்னைய தினங்களுடன் ஒப்பிடுகையில் 4.57% வளர்ச்சியை காட்டியது

விலைச்சுட்டெண்களிலும் பாரிய அதிகரிப்பு; வங்கி நிறுவனங்களின் மூலமே அதிக பங்களிப்பு கிடைத்துள்ளது.

 

ஐந்து தினங்கள் விடுமுறையில் மூடப்பட்டிருந்த பங்குச் சந்தை செயற்பாடுகள் நேற்று மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது. இதையடுத்து விலைச்சுட்டெண்களின் பெறுமதிகள் நேற்று கணிசமானளவு அதிகரித்துள்ளன.

தேசிய கடன் மறுசீரமைப்பு யோசனை, பாராளுமன்றத்தின் அங்கீகாரத்தைப் பெற்றதாலேயே, பங்குச் சந்தையின் பெறுமதிகள் கணிசமாக அதிகரித்துள்ளன.

அலகு 431.64 வீத பாரிய அதிகரிப்பு அனைத்து விலைச் சுட்டெண்களுக்கிணங்க அதிகரித்துள்ளது. அது முன்னைய கொடுக்கல் வாங்கல்கள் தினத்துடன் ஒப்பிடுகையில் 4.57% வளர்ச்சியைக் காட்டுகிறது. அதேவேளை, S&B SL20 விலைச்சுட்டெண் 6.10% விசேட அதிகரிப்பை பதிவுசெய்துள்ளது. நேற்றைய தினத்தில் ஆரம்ப கொடுக்கல் வாங்கல் முதல் ஒரு மணி நேரத்தில் அலகு 165.54% அதிகரித்துள்ளது.

ஆரம்ப கொடுக்கல் வாங்கல் ஒரு மணி நேரத்தில் 1.74 பில்லியன் ரூபா கொடுக்கல் வாங்கல் பதிவாகியுள்ளமை விசேட அம்சமாகும்.

அனைத்து விலைச்சுட்டெண்களின் பெறுமதிகள் அதிகரித்துள்ள மையானது, அதிக பங்களிப்பு வங்கி நிறுவனங்களின் மூலம் கிடைத்துள்ளதுடன் அதில் கொமர்ஷல் வங்கி, சம்பத் வங்கி, HNB மற்றும் NDB ஆகியவை முன்னிலை வகிக்கின்றன.

கொழும்பு பங்குச் சந்தையின் பிரதான விலைச்சுட்டெண்களின் அனைத்து பங்கு விலைச்சுட்டெண்கள் நேற்றைய தினம் கொடுக்கல் வாங்கல்களின் ஆரம்பத்தில் 10 ஆயிரம் அலகை தாண்டியுள்ளதுடன் அது 10,076.64 என பதிவாகியுள்ளது.

அந்தவகையில் அதற்கு முந்தைய தினத்தோடு ஒப்பிடுகையில் அது 633.69 அலகு உயர்வைக் காட்டுவதுடன் 6.71 வீத அதிகரிப்பை கொண்டுள்ளது.

அதேவேளை, நேற்றைய தினத்துக்கான கொடுக்கல் வாங்கல்களின் இறுதியில் S&B SL20 விலைச்சுட்டெண் அலகு 2,992.82 என பதிவாகியுள்ளதுடன், அது முன்னைய தினத்துடன் ஒப்பிடுகையில் 279.17 அலகாக அதிகரித்துள்ளது. இது 10.29 என்ற பாரிய அதிகரிப்பை காட்டுவதாக கொழும்பு பங்குச் சந்தை தெரிவிக்கின்றது.

நேற்றைய தினத்தில் கொடுக்கல் வாங்கல்கள் நிறைவுறும் போது, மொத்தப்புரள்வு 7.41 பில்லியன் ரூபாவாக பதிவாகியுள்ளமை விசேட அம்சமாகும்.

 

 

(லோரன்ஸ் செல்வநாயகம்)

 


Add new comment

Or log in with...