பாதாள உலக குழுக்களை அடக்க STF படை களத்தில்

வீதிச்சோதனை சாவடிகள் அமைத்து தேடுதல்

மேல் மற்றும் தென் மாகாணங்களில் பாதாள உலகக் குழுக்களின் செயற்பாடுகளை அடக்குவதற்கு பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் களமிறக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேல் மாகாணத்தின்  தெரிவு செய்யப்பட்ட பிரதேசங்களிலும் தென் மாகாணத்தின் கொஸ்கொட, அம்பலாங்கொட, அஹூங்கல்ல, எல்பிட்டிய, மீட்டியகொட, ஹிக்கடுவ மற்றும் மாத்தறை ஆகிய பகுதிகளிலும் விசேட அதிரடிப்படையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

வீதி சோதனைச் சாவடிகளை அமைத்து சோதனை மற்றும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.


Add new comment

Or log in with...