புது இடஞ்சார்ந்த கணனியை அறிமுகம் செய்தது அப்பிள் நிறுவனம்

அப்பிள் நிறுவனம் ‘விஷன் ப்ரோ’ என்ற அதன் புதிய கருவியை அறிமுகம் செய்துள்ளது.

இடஞ்சார்ந்த கணினி எனக் கருதப்படும் அதன் விலை 3,499 அமெரிக்க டொலர்களாகும். அது அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் விற்பனைக்கு வரும்.

கலிபோர்னியா மாநிலத்தில் நடைபெற்ற அப்பிள் நிகழ்ச்சியில் அது அறிமுகம் செய்யப்பட்டது.

மெய்நிகர், உண்மையான சுற்றுச்சூழல் ஆகிய இரண்டையும் கலந்து கண்முன் கொண்டுவரும் கருவி அதுவென்று கூறப்பட்டது.

வீடியோ விளையாட்டு, வீடியோ ஒளிபரப்பு, மாநாடு ஒளிபரப்பு ஆகியவற்றில் அது கவனம் செலுத்தும்.

பல ஆண்டுகளாக தயாரிப்பில் இருந்த அந்தக் கருவியில் 12 கெமராக்கள், 2 கண்களுக்கும் 2 திரைகள், ஒரு கணினி ஆகியவை உள்ளன. அதை மின்கலத்துடன் இணைத்தே பயன்படுத்த முடியும். அந்த மின்கலத்துடன் சுமார் 2 மணிநேரம் பயன்படுத்தலாம்.


Add new comment

Or log in with...