பி.எச். அப்துல் ஹமீத் எழுதிய 'வானலைகளில் ஒரு வழிப்போக்கன்' நூல் அறிமுக விழா

- ஜூன் 03 கொழும்பில்!

உலகத் தமிழ் அறிவிப்பாளர் பி.எச்.  அப்துல் ஹமீத் எழுதிய 'வானலைகளில் ஒரு வழிப்போக்கன்' நூலின் அறிமுக விழா கொழும்பு - 7இல் அமைந்துள்ள அழகியற் கற்கை அரங்கில் நாளை (03) சனிக்கிழமை பிற்பகல் 3.00 மணிக்கு நடைபெற ஏற்பாடாகியுள்ளது.

அமெரிக்காவில் நியூயோர்க் நகரில் நிகழ்ந்த FETNA விழாவில் வெளியிடப்பட்ட இந்நூல், அடுத்து கனடா, இங்கிலாந்து, இந்தியா (தமிழ்நாடு) ஆகிய நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்டது.

அதனை தொடர்ந்து, தற்போது இலங்கையில் இதன் அறிமுக விழா வெண்பா நூல்மனையின்  ஒருங்கிணைப்பில் நிகழ்கிறது.

சிரேஷ்ட அறிவிப்பாளர் விமல் சொக்கநாதனின் தலைமையில் இடம்பெறும் இந்நிகழ்வில் சிறப்பு அதிதிகளாக முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் மற்றும் ஜனநாயக மக்கள் முன்னணி கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.

இந்நிகழ்வில் சிரேஷ்ட வானொலி அறிவிப்பாளரும் முன்னாள் பிரதிப் பரீட்சை ஆணையாளருமான  ஜி. போல் அந்தனி வாழ்த்துரை ஆற்றவுள்ளார்.

அத்துடன், எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் சிலோன் லிமிட்டெட் (வீரகேசரி) நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் குமார் நடேசன் இந்நூலை வெளியிடவுள்ளார்.

‍தொடர்ந்து, பேராதனை பல்கலைக்கழக முன்னாள் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் வல்லிபுரம் மகேஸ்வரனின் சிறப்புரை இடம்பெறும்.

சிரேஷ்ட ஊடகவியலாளர் கலாநிதி எம்.சி. ரஸ்மின் மற்றும் பேராதனை பல்கலைக்கழக தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் ஸ்ரீ. பிரசாந்தன் ஆகியோர் நூல் நயவுரையினை வழங்கவுள்ளனர்.

மேலும், இந்த நூல் அறிமுக நிகழ்வினை 'தகவம்' செயலாளரும் இலக்கியச் செயற்பாட்டாளருமான வசந்தி தயாபரன் தொகுத்து வழங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 


Add new comment

Or log in with...