நீதியான தேசத்துக்காக கனவு கண்டது குற்றமா?

லலித், குகன் காணாமலாக்கப்பட்டு அடுத்த மாதத்துடன் எட்டு வருடங்கள்

தற்போது 8 வருடங்கள் ஆகி விட்டன. ஆனாலும் லலித்தின் தந்தையும் குகனின் மகளும் அவர்கள் வரும்வரை காத்திருக்-கின்றார்கள். இன்று லலித்,- குகன் எங்கே என்ற கேள்விக்கு பதில ளிக்க பொறுப்பு வாய்ந்தவர்கள் இல்லை. 'அவர்களை கொழும்- புக்கு கொண்டு சென்றார்கள், கொண்டு செல்லவில்லை' என்று கூறி மக்களை திசைதிருப்ப முயற்சித்தார்கள். எனினும் இதுவரை அவர்களுக்கு என்ன நடந்ததென்று தெரியாது. அதுபற்றி முதலில் கூறிய கிராம சேவகரும் தற்போது அங்கில்லை.

தனது மகன் காணாமலாக்கப்பட்டது தொடர்பாக ஆறுமுகன் வீரராஜா ஐக்கிய நாடுகள் சபையிடம் முறைப்பாடு செய்து நான்கு வருடங்கள் ஆகின்றன.அடுத்த மாதம் 9ம்திகதியுடன் லலித்தும் அவரது நண்பர் குகனும் காணாமலாக்கப்பட்டு எட்டு வருடங்களாகின்றன.

தனது மகன் மீண்டும் வருவாரென்ற எதிர்பார்ப்புடன் தந்தை ஆறுமுகன் கண்ணீருடன் காத்திருக்கின்றார். தந்தைக்கு காத்திருப்பதில் பிரச்சினையில்லை. பிள்ளைகளுக்காக எல்லாத் தந்தையும் செய்வதுதான் அது. மகன் லலித் அவர் முன்னால் இருந்திருந்தால் கடந்த முதலாம் திகதியன்று(நவம்பர்) அவரது வயது 38 ஆகும்.

மகன் லலித்குமார் வீரராஜாவும் அவரது நண்பரான குகன் முருகானந்தனும் 8 வருடங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் காணாமலாக்கப்பட்டோர்களை தேடியவர்களாவர். யுத்தத்தில் அனைத்துமே நியாயமானது என எண்ணியிருந்தவர்களுக்கு மனிதாபிமானம் என்பது புத்தகத்திலுள்ள எழுத்துக்கள் மாத்திரமாகவே இருந்த காலம் அது.

எதிரிக்குக் கூட கௌரவமான மரணத்தையே ஏற்படுத்த வேண்டும் என்ற மனிதாபிமான நியாயத்தை மறந்து சிலர் செயற்பட்டுள்ளார்கள். குற்றம் செய்த சிலர் காலவோட்டத்தில் பாவங்களுக்கு மன்னிப்புப் பெற்றுக் கொண்டார்கள்.

மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் அரிச்சுவடியை படித்துக் கொண்டு கொழும்பில் தங்கியிருந்த லலித்குமார் வீரராஜுக்கு காணாமலாக்கப்பட்டோரின் வேதனை தெரியாமலிருந்தது. ஆனால் ஜே. வி. பி வரலாற்றில் 88-_89 களில் தனது கட்சிச் சகோதர்கள் காணாமலாக்கப்பட்டதை அவர் அறிந்திருந்தே வைத்திருந்தார்.

லலித்துக்கு அக்கம் பக்கத்திலுள்ளவர்கள் காணாமலாக்கப்பட்ட நேரடி அனுபவம் 2009ம் ஆண்டே அறியக் கிடைத்தது. யுத்தம் முடிந்த பிறகு யாழ்ப்பாணம் சென்ற முதல் கப்பலிலேயே லலித் அங்கு சென்றார். யாழ்ப்பாணம் சென்ற லலித் யாழ். மக்கள் பாற்சோறு சாப்பிட்டதைக் காணவில்லை. அவருக்கு பட்டாசு சத்தம் கேட்கவில்லை. மேளவாத்தியம் கேட்கவில்லை. இறுகிய முகத்துடன் துப்பாக்கிகளைக் கையிலேந்தி அங்கும் இங்கும் சந்தேகத்துடன் பார்க்கும் வீரர்களையே கண்டார்.

அவர் யாழ்ப்பாணத்தில் மாத்திரமல்ல கிளிநொச்சி, வவுனியா மாவட்டங்களிலும் அலைந்து திருந்தார். சில நேரங்களில் கிழக்கு மாகாணத்துக்கும் சென்றுள்ளார். அது லலித் ஆவார். மனதை உருக்கும் ஓலங்களுடன் காணாமல் போனோரை கண்டுபிடிக்க அதன் பின்னரே அவர் முயற்சி செய்தார். தனது கட்சியான மக்கள் விடுதலை முன்னி தனது நிழலென லலித் நம்பினார்.

அழுவது தமது தாய்மார்களே, தனது அன்பானவர்கள் வரும் வரை காத்திருப்பது தங்களுடைய சகோதரர்களே என்று லலித்துக்குத் தோன்றியது. அங்கு உள்ளவர்கள் தனது இன மக்களே என லலித் எண்ணினார்.

லலித் செல்லும் இடங்களிலெல்லாம் கண்ணீரும் வேதனையும் சில வேளைகளில் குரோதமுமே எஞ்சியிருந்தன. அரசல்லாத அமைப்புகளின் அடையாளங்கள் உளள முகாம்களுக்குள் எட்டிப் பார்த்தார். எல்லா வேளைகளிலும் காணாமலாக்கப்பட்டோர், யுத்தத்தால் அனாதைகளாக்கப்பட்டோர் தமிழ் அரசியல் கைதிகள் ஆகியோரின் தகவல்களே லலித்தின் கோவைகளில் நிறைந்திருந்தன. அது எவ்வளவு என்று கூற முடியாதுள்ளதற்குக் காரணம் அவரால் தனது வீட்டில் வைத்திருந்த அக்கடிதக் கோப்புகள் சிலரால் கொண்டு செல்லப்பட்டிருந்ததனாலாகும்.

அரசியல் ஆதரவாளர்கள் அல்லாதோர் சிலர் லலித்தின் கடிதங்களைக் காட்டி ஊடகங்களில் வீரர்களானார்கள். இன்று அதிகாரமுள்ள இடங்களில் தலைவர்களாக உள்ள அவர்களுக்கு லலித்தை ஞாபகம் இருக்குமா என்பது தெரியவில்லை. யுத்தம் என்பது வடக்குக்கும் கிழக்கிற்கும் அப்பாலுள்ள மாகாணங்களுக்கு வெற்றியையும் சந்தோஷத்தையும் அளித்ததொன்றாகும். காணாமலாக்கப்பட்டோரை கண்டுபிடிக்க முயற்சிப்பது பாறையில் தலையை மோதிக் கொள்வது போன்றதென லலித்தின் கிராம மக்கள் அநேகர் எண்ணினர். ஆனால் லலித் பாதிக்கப்பட்டவர்கள் மீது அன்பு செலுத்தினார். மக்கள் விடுதலை முன்னணியின் கொள்கையின்படி கீழ்மட்ட வகுப்பு மக்களைப் பற்றி தெளிவுபடுத்த செல்லாத போதும் தான் சந்திக்கும் அனைவரிடமும் அவர் பாதிக்கப்பட்ட மக்கள் ஒன்றிணையாவிட்டால் ஒருபோதும் எதனையும் சாதிக்க முடியாதெனத் தெரிவித்தார். அந்தப் பாதிக்கப்பட்டவர்களுக்கு உண்மையை உணர்த்துவது தனது பொறுப்பென அவர் எண்ணினார்.

அடுத்த நடவடிக்கை சட்ட நடவடிக்கையாகும். லலித் கட்சியோடு இணைந்து வடக்கு மக்களுக்காக ஆஜரானார். பல கருத்துக்களைக் கூறுவதன் மூலம் லலித் வடக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்காக ஆஜராக மக்கள் விடுதலை முன்னணிக்குள் போராட்டமொன்றை மேற்கொண்டார். தாக்குதல், பயமுறுத்த முயற்சித்தல், அச்சுறுத்தல், தான் உலாவிய யுத்த பூமியின் பொறுப்பாளர்களான அரச பாதுகாப்பு பிரிவினரிடமிருந்து ஏற்பட்ட அழுத்தங்களுக்கு சிரித்தபடியே முகம்கொடுத்தார்.

ஒருமுறை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பத்மினி சிதம்பரநாதனின் கலந்துரையாடலொன்றில் ஈடுபட்டிருந்த பொழுது வீட்டுக்குள் நுழைந்து லலித்தைத் தாக்கினார்கள். அறையொன்றில் பூட்டி வைத்து அவரைத் தாக்கியதாக அந்த பாராளுமன்ற உறுப்பினரின் வீட்டிலிருந்தோர் கூறியுள்ளார்கள். மக்கள் விடுதலை முன்னணி உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தியும் அங்கு காயமடைந்தார். அரசியல் நண்பர்கள் சிலருடன் அவர் யாழ்ப்பாணத்துக்கு வந்து சென்றார். அவரின் இப்பயணம் காரணமாக அவர் மீது அன்பு ஏற்பட்டது. அரச பாதுகாப்புப் பிரிவினரால் தனக்குப் பாதுகாப்பு இல்லை என லலித்துக்குத் தோன்றியது. பல தடவை பொலிஸ் கூடுகளில் தங்க நேரிட்டது. அதிகாரிகளின் தாக்குதலுக்கு உள்ளாகினார். காணாமலாக்கப்பட்டோரைப் பற்றிய தகவல்களை தனது கால் வலிக்கத் தேடிய தனக்கும் அவ்வாறானதொரு நிலை ஏற்படுமென அவர் அறிந்தே இருந்தார். அவருக்கு ஆபத்து இருந்தாலும் அதனால் கிடைக்கும் பலன் ஏனையோருக்கு நன்மையாக அமையுமென அறிந்திருந்தார்.

2010இல் லலித்தின் வாழ்க்கையின் விதியினால் அனுப்பபட்ட மனிதரைச் சந்தித்தார். காணாமலாக்கப்படும் போது தன்னுடைய பெயரோடு இணையும் குகனுடைய வாழ்க்கை லலித்தை விட வித்தியாசமானதாகும். எல். ரி. ரி.ஈ அங்கத்தவராக இருந்த குகன் அதிலிருந்து சாதாரண மக்கள் யுத்தத்தால் பாதிக்கப்படுவதை எண்ணி பொறுக்க முடியாமலேயே விலகியதாக அவரது மனைவி முருகானந்தன் ஜனதா கூறினார். குகன் மின்சாரம் போன்ற மனிதன். உடல் பலம், மனத்தைரியம் உள்ள அவர் போன்ற ஒருவரை யாரும் கண்டதில்லை என அவரது மனைவி கூறினார்.

ஜனநாயக அரசியல் புரியாமல் கெரில்லா யுத்தம் புரிந்த எல். ரி. ரி.ஈ.யிலிருந்து 99ம் ஆண்டு குகன் விலகினார். அவருக்கு தனது மனைவியும், மகள் சாரங்காவும் அவரது வாழக்கையில் முக்கியமானத் தோன்றினார்கள். தான் வாழ்வதற்காக பல முயற்சிகளை மேற்கொண்டாலும் எப்போதும் ஒரு புரட்சியாளன் போலவே செயற்பட்டார். யாழ்ப்பாணத்தில் சில ஜனநாயகம் என்று கூறிக் கொள்ளும் அரசியல் கட்சிகளின் மாற்றத்துக்கு நடுவே அவர் வெளிப்படையாகவே மோதினார். மணல் விற்பனையில் தனக்கேற்படும் அசௌகரியங்களை அவர் பொறுத்துக் கொள்ளவில்லை. பிரபல அரசியல்வாதிகளுடன் அவர் சவால் விட்டார்.

2010இல் அதிகாரத்திலிருந்த ஒரு தரப்பாருடன் நடந்த வாய்த்தர்க்கத்தில் குகன் சிறைவைக்கப்பட்டார். முழு நேர அரசியலில் ஈடுபட்டிருந்த லலித்தை குகன் அங்குதான் சந்தித்தார். அதுதான் அவர்களின் ஆரம்பம். லலித் ஜே.வி.பி போஸ்டர்களை ஒட்டும் போது கைது செய்யப்பட்டு சிறைவைக்கப்பட்டிருந்தார். ஒன்றாக சிறையில் இருந்த அவர்கள் ஒரே நாளில் வழக்குகளுக்கு ஆஜரானார்கள். அங்குதான் அவர்கள் தொலைபேசி இலக்கங்களை பரிமாறிக் கொண்டார்கள். லலித்தும் குகனும் ஒருதாய் வயிற்றில் பிறந்த சகோதரர்களல்லர். ஆனாலும் அவர்கள் ஒன்றாக இணைந்து காணாமல் போனோரைத் தேடினார்கள். அவர்களின் உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார்கள். அரசியல் கைதிகளின் வாழ்வுக்காக ஒன்றாக இணைந்தார்கள். சிரித்த முகத்துடன் அடுத்தவர்களின் வேதனையின் ஆழத்தை உணர்ந்தார்கள். தமக்கு வரும் தொல்லைகளை மறந்து தனது முழு வாழக்கையையுமே அரசியலுக்காக லலித் அர்ப்பணித்தார். குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டிருந்தாலும் அரசியலைப் பற்றி குகனும் அறிய ஆர்வத்துடன் இருந்தார்.

இருவரும் சந்தித்து வருடம் கடந்தது. மக்கள் விடுதலை முன்னணி இரண்டாகப் பிளவுபட்டது. யுத்தத்தின் பின்னர் தேசிய பிரச்சினை தொடர்பாக பல விவாதங்களும் கலந்துரையாடல்களும் மேற்கொள்ளப்பட்டிருந்தன. இவ்வேளையில் குகன் மக்கள் விடுதலை முன்னணியை விட்டு வெளியேறினார்.

லலித்துக்கு கட்சியொன்று இருக்கவில்லை. ஆனாலும்அவர் தனது பணியைத் தொடர்ந்ததால் மக்கள் விடுதலை முன்னணி லேபில் இல்லாவிட்டாலும் லலித்தின் நடவடிக்கைகள் தொடர்கின்றதென அதிகாரத்திலுள்ளவர்களுக்கு புரிந்தது. குகனின் வீட்டுக்கும், லலித்தின் வீட்டுக்கும் முன்பின் அறியாதவர்கள் வர ஆரம்பித்தனர். மகனைப் பாதுகாத்துக் கொள்ளும்படி லலித்தின் உறவினர்களுக்கும், கணவரை பாதுகாத்துக் கொள்ளும்படி குகனின் மனைவிக்கும் எச்சரிக்கை விடுத்தனர். அது அரச பாதுகாப்புப் பிரிவினர் என பலர் உறுதி செய்துள்ளார்கள்.

“நீ செய்யும் அரசியலை யாழ்ப்பாணத்துக்குப் போய்ச் செய். இல்லாவிட்டால் நீ இறக்க நேரிடும்” என்று அவரைத் தாக்கி எச்சரிக்கை விடுத்த சந்தர்ப்பங்களும் உண்டு. பயம் இல்லாவிட்டாலும், தனக்கு ஆபத்துள்ளது என்று அவர் உணர்ந்தார். அனால் மக்கள் விடுதலை முன்னணியிலிருந்து பிரிந்து சென்ற சகோதரர்களுடன் (தற்போதை பெரடுகாமி கட்சி) வேலை செய்வதில் மாற்றம் இருக்கவில்லை. அவர் அதனை ‘கட்சி சொல்வது’ என்றே கொண்டார். சிலர் யாழ்ப்பாணத்துக்கு செல்ல முடியாதென்று கூறினார்கள். மனிதன் என்ற ரீதியில் தன்னுடன் அரசியலில் ஈடுபட்ட அங்கத்தவர் ஒருவருடன் “எனக்கு அச்சமாக உள்ளது” என்று கூறியுள்ளார். ஆனால் முடியாதென்று கூறாமல் யாழ்ப்பாணத்துக்குச் சென்றார்.

ஆபத்தான நாட்களுடன் காலம் கடந்தது. டிசம்பர் 10ம் திகதி எதிர்பார்ப்புடன் கூடிய நாளாகும். 9ம்திகதி காலையில் வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் ஆவரங்காலிலுள்ள உள்ள குகனின் வீட்டுக்கு வந்தார். பகல் 2 மணியளவில் அவரை யாரும் பின்தொடர்ந்ததாக அவரின் மனைவிக்குத் தோன்றவில்லை. இரண்டு மூன்று தொலைபேசி அழைப்புகளுக்கு பதிலளித்த குகன், சிறிது நேரம் வீட்டில் நித்திரை கொண்டார். 5 மணிவரை தான் வரும்வரை காத்திருந்த லலித்தை யாழ்ப்பாணத்துக்கு அழைத்துச் செல்ல குகன் வீட்டுக்கு வந்ததுமே புறப்பட்டார்.

ஆவரங்காலிலிருந்து யாழ்ப்பாணம் செல்லும் பாதை பாழடைந்திருந்தது. வீடுகள் கடைகள் இருந்தாலும் சனநடமாட்டம் இருக்கவில்லை. நீர்வேலி சந்தியிலிருந்து யாழ்ப்பாணத்துக்குச் செல்லும் பாதையுடன் இடது புறம் கோவிலுக்கருகில் காட்டுப்பாதையொன்று இருந்தது. யாரும் தன்னை பின்தொடராதவாறு குகன் தனது சைக்கிளைச் செலுத்தினார். ஏனென்றால் தங்களைப் பின்தொடரும் வானுக்கோ வேறெந்த வாகனத்துக்கோ அவர்களைப் பின்தொடர முடியாது.

காட்டுப்பாதை முடியும் இடத்தில் கத்தோலிக்க தேவாலயம் ஒன்று இருந்தது. நீர்வேலி கிராம சேவகர் வீடும் அதனருகிலேயே இருந்தது. ஆனால் மறந்து போன விடயமொன்றிருந்தது. கிராம சேவகரின் வீட்டுக்கு அப்பால் செல்வதற்கு பாதையில்லை. தேவாலயத்துக்கு முன்னால் நீர்வேலி_ யாழ்ப்பாணம் பாதையில் வானில் வந்து அவர்களைக் கடத்தியிருக்க முடியும். குகனும் லலித்தும் வந்த பாதையில் இறுதி அடையாளம் அங்குதான் கிடைத்தது. அது அவர்கள் பயணம் செய்த சைக்கிளாகும். இதுவரை அவர்களுக்கு என்ன நடந்ததென்று தெரியாது. அதுபற்றி முதலில் கூறிய கிராம சேவகரும் தற்போது அங்கில்லை.

தற்போது இருப்பது புதிய கிராம சேவகர். அவ்வாறென்றால் கடத்தல் பற்றி சொல்ல முடியாதளவுக்கு யாழ்ப்பாணத்து சூழ்நிலை இருந்திருக்கும். இன்னும் எவ்வளவு கடத்தல்கள், அச்சுறுத்தல்கள், தாக்குதல்கள் நடந்திருக்குமோ?

தற்போது 8 வருடங்கள் ஆகி விட்டன. அவர்களை கொழும்புக்கு கொண்டு சென்றார்கள், கொண்டு செல்லவில்லை என்று கூறி மக்களை திசை திருப்ப முயற்சித்தார்கள். லலித்_-குகன் காணாமற் போனது தொடர்பாக ஏற்பட்ட அரசியல் விடயங்களோ அரசியல் தலையீடுகள் பற்றியோ கூறுவதற்கு நேரத்தை செலவிடுவது அநாவசியமாகும்.

முன்னாள் ஊடக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, லலித்_-குகன் இருக்கிறார்கள் என்று கூறினாலும் நீதிமன்றில் அதனைக் கூறவில்லை. லலித்_ குகன் பற்றி தெளிவான தகவல்கள் மறைந்து போவது அங்குதான். முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ லலித்,- குகன் பற்றி தனக்குத் தெரியாதென்றார். அது தொடர்பாக விசாரிக்கும் வழக்குக்கு சாட்சியமளிக்க இதுவரை அவர் செல்லவில்லை. இந்நாட்டின் நிலைமை இதுவாகும்.

அரச ஜனநாயகம் அப்படியானதொன்றுதான். லலித் –குகன் வர மாட்டார்கள் என அவர்களை எதிர்பார்த்துள்ளவர்களின் மனங்களை நோகடிக்க எமக்கு அவசியமில்லை. ஆனால் லலித்தின் தந்தையும் குகனின் மகளும் அவர்கள் வரும்வரை காத்திருக்கின்றார்கள். ஆனால் இன்று லலித்- குகன் எங்கே என்ற கேள்விக்கு பதிலளிக்க பொறுப்பு வாய்ந்தவர்கள் இல்லை.

லலித்குமார் வீரராஜ் மனித உரிமைகள் செயற்பாட்டாளராக மக்கள் விடுதலை முன்னணியில் இருக்கும் போது காணாமல் போனாலும் அரசியல் கைதிகள் தொடர்பாக பங்களிப்பை வழங்கிய லலித் மற்றும் அவரது நண்பர் குகனின் காணாமல் போனமை அரசியல் மேடைகளில் கூறப்படுவது ஒரே கடிதத்தை மீண்டும் மீண்டும் எழுதத் தூண்டுவது போன்றதாகும்.


Add new comment

Or log in with...