சிங்கள - தமிழ் புத்தாண்டுக்காக ரூ. 5,000 கொடுப்பனவு

சிங்கள - தமிழ் புத்தாண்டுக்காக ரூ. 5,000 கொடுப்பனவு-Rs 5000 to All Low Income and Samurdhi Beneficiaries-Tamil-Sinhala New Year

கொரோனா தொற்று பரவல் காரணமாக பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்ட சமுர்த்தி பெறுநர்கள் மற்றும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு தமிழ் - சிங்கள புத்தாண்டுக்காக ரூ. 5 ஆயிரம் கொடுப்பனவு வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களின் வேண்டுகோளுக்கமைய, ஜனாதிபதி மற்றும் பிரதமரின் ஆலோசனைக்கு அமைய, இக்கொடுப்பனவை வழங்கவுள்ளதாக, சமுர்த்தி, சமுர்த்தி, வதிவிடப்‌ பொருளாதார, நுண்நிதிய, சுயதொழில்‌, வியாபார அபிவிருத்தி மற்றும்‌ கீழுழைப்பு பயன்பாட்டு அரச வளங்கள்‌ அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்‌ ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.

புத்தாண்டுக்கு முன்னர் இக்கொடுப்பனவை வழங்குவதற்கு அவசியமான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு சமுர்த்தி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.


Add new comment

Or log in with...