- அமைச்சர் கஞ்சனவின் கருத்துக்கு ஆணைக்குழு தலைவர் ஜனக பதில்
- எரிபொருள் கொள்வனவுக்கு அரசு அறவிடும் PAYE வரியை பய்படுத்துமாறும் ஆலோசனை
அமைச்சர் கஞ்சன விஜேசேகரவின் குற்றப்பத்திரிகையை எதிர்கொள்ள ஆவலுடன் காத்திருப்பதாக, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க அறிவித்துள்ளார்.
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவரை நீக்க தயாராகி வருவதாக, மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இன்றையதினம் (29) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்த கருத்து தொடர்பிலேயே அவர் இக்கருத்தை வெளியிட்டுள்ளார்.
இதேவேளை, உயர் தர பரீட்சை நாட்களில் தடையில்லா மின்சாரம் வழங்குவதற்காக தேவையான எரிபொருட்களை வாங்குவதற்கு அரசாங்கத்தால் வசூலிக்கப்படும் PAYE வரியைப் பயன்படுத்துமாறும் அவர் விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவித்துள்ளார்.
Add new comment