பண்டிகையில் ரூ. 5,000 போலி நாணயத்தாள் தொடர்பில் அவதானம்

கொழும்பு – ப்ளுமெண்டல் பகுதியில் 5,000ரூபா போலி நாணயத்தாள்களுடன் இரண்டு சந்தேக நபர்களை நேற்று (31) பொலிஸார் கைது செய்தனர். 

இவ்விருவரும், போலி ஐயாயிரம் ரூபா நாணயத்தாள்களை வழங்கி, வர்த்தக நிலையமொன்றில் பொருட்களைக் கொள்வனவு செய்ய முயற்சித்துள்ளனர்.இதன்போது சந்தேகமடைந்த வர்த்தக நிலைய உரிமையாளர், பொலிஸாருக்கு முறையிட்டதை தொடர்ந்து இருவரும் கைது செய்யப்பட்டனர். 

கைதான சந்தேக நபர்கள், வெல்லம்பிட்டி மற்றும் முகத்துவாரம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, போலி நாணயத்தாள்கள் புளக்கம் அடையாளம் காணப்பட்டு வரும் நிலையில், பண்டிகைக்காலத்தில் 5,000 ரூபா நாணயத்தாள்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு பொலிஸார், பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


Add new comment

Or log in with...