அனைத்தையும் அவதானித்து திங்கட்கிழமை ஊரடங்கு நீக்கப்படும்

அனைத்தையும் அவதானித்து திங்கட்கிழமை ஊரடங்கு நீக்கப்படும்-Curfew Imposed in Western Province Will be Removed on Monay After Considering Everything

எதிர்வரும் திங்கட்கிழமைக்கு (09) பின்னர் மேல் மாகாணத்தில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்தும் அமுல்படுத்த எண்ணம் இல்லை என, கொவிட்-19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் பிரதானி, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

நாட்டை மூடுவது தொழில்துறையில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் எனத் தெரிவித்துள்ள அவர், அனைத்து விடயங்களையும் அவதானித்து, மேல் மாகாணத்தில் எதிர்வரும் திங்கட்கிழமை (09) அதிகாலை 5.00 மணி வரை விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவை நீக்குமாறு, ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளதாக இராணுவத் தளபதி மேலும் தெரிவித்துள்ளார்.

ஆயினும், மக்கள் உரிய சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றினால் ஊரடங்கு உத்தரவு விதிக்க வேண்டிய அவசியமில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


Add new comment

Or log in with...