வெலிக்கடை சிறையில் 7 பேருக்கு கொரோனா தொற்று

வெலிக்கடை சிறையில் 7 பேருக்கு கொரோனா தொற்று-6 Tested Positive in Welikada Prison-2 Male Inamates 4 Female Inmates and a Prison Officer

வெலிக்கடை சிறைச்சாலையில் 7 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கொவிட்-19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் இதனை அறிவித்துள்ளது.

இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்களில் ஒரு சிறைச்சாலை அதிகாரி மற்றும் 4 பெண் கைதிகள், 2 ஆண் கைதிகள் ஆகியோருக்கு இவ்வாறு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அடையாளம் காணப்பட்ட கைதிகளை வெலிக்கந்தை வைத்தியசாலைக்கும், சிறைச்சாலை அதிகாரியை IDH வைத்தியசாலைக்கும் அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Add new comment

Or log in with...