கொழும்பில் ஊரடங்கு: கோட்டை, புறக்கோட்டை, பொரளை, வெலிக்கடை

கொழும்பில் ஊரடங்கு: கோட்டை, புறக்கோட்டை, பொரளை, வெலிக்கடை-Curfew From 6pm to Fort-Pettah-Borella-Welikada

கொழும்பில் இதுவரை 19 பொலிஸ் பிரிவுகளில் ஊரடங்கு

கொழும்பில் கோட்டை, புறக்கோட்டை, பொரளை, வெலிக்கடை ஆகிய பொலிஸ் பிரிவுகளுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு இன்று (25) மாலை 6.00 தொடக்கம் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மறு அறிவித்தல் வரை குறித்த ஊரடங்கு உத்தரவு அமுலில் இருக்கும் என, கொவிட்-19 எதிர்பாரா பரவலைத் தடுக்கும் செயற்பாட்டு மையம் அறிவித்துள்ளது.

ஏற்கனவே கொழும்பில் 15 பொலிஸ் பிரிவுகளில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், தற்போது மேலும் 4 பொலிஸ் பிரிவுகள் உள்ளிட்ட 19 பொலிஸ் பிரிவுகளில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

ஒக்டோபர் 22ஆம் திகதி முதல் கொழும்பில், மட்டக்குளி, முகத்துவாரம் (மோதறை), ப்ளூமெண்டல், கிராண்ட்பாஸ், வெல்லம்பிட்டி, கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவுகளிலும், ஒக்டோபர் 23 முதல் மருதானை, தெமட்டகொடை ஆகிய பொலிஸ் பிரிவுகளிலும், நேற்று (24) முதல் கொத்தட்டுவ, முல்லேரியா, மாளிகாவத்தை, வாழைத்தோட்டம், டாம் வீதி, ஆட்டுப்பட்டித் தெரு, கரையோர பொலிஸ் பிரிவுகளிலும் மறுஅறிவித்தல் வரை ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...