தற்போது வரை நாடு முழுவதும் 56 பொலிஸ் பிரிவுகளில் ஊரடங்கு
கொழும்பில் மேலும் 5 பொலிஸ் பிரிவுகளில் மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
அதற்கமைய, மாளிகாவத்தை, வாழைத்தோட்டம், டாம் வீதி, ஆட்டுப்பட்டித் தெரு, கரையோர பொலிஸ் ஆகிய பொலிஸ் பிரிவுகளில் உடன் அமுலாகும் வகையில் மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்
அந்த வகையில் தற்போது வரை இலங்கையில் 56 பொலிஸ் பிரிவுகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிபத் பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
அந்த வகையில், குளியாபிட்டி பகுதியில் 5 பொலிஸ் பிரிவுகள், கம்பஹாவில் 33 பொலிஸ் பிரிவுகள், கொழும்பில் 15 பொலிஸ் பிரிவுகள், களுத்துறையில் 3 பொலிஸ் பிரிவுகளில், தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக, அவர் தெரிவித்தார்.
Add new comment