கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவில் மாலை 6.00 மணி முதல் ஊரடங்கு

கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவில் மாலை 6.00 மணி முதல் ஊரடங்கு-Quarantine Curfew From 6pm in Kotahena Police Area

இன்று (22) பிற்பகல் 6.00 மணி முதல் கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.

மறு அறிவித்தல் வரை குறித்த ஊரடங்கு உத்தரவு அமுலில் இருக்கும் என, கொவிட்-19 எதிர்பாரா பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் அறிவித்துள்ளது.

ஏற்கனவே, இன்று முற்பகல் முதல் கொழும்பின் 5 பொலிஸ் பிரிவுகளான மட்டக்குளி, முகத்துவாரம் (மோதறை), ப்ளூமெண்டல், கிராண்ட்பாஸ், வெல்லம்பிட்டி ஆகிய பொலிஸ் பிரிவுகளில் மறு அறிவித்தல் வரை ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...