தரம் 5, A/L பரீட்சை திகதிகள்; பாடசாலை விடுமுறை தினம் அறிவிப்பு

தரம் 5, A/L பரீட்சை திகதிகள்; பாடசாலை விடுமுறை தினம் அறிவிப்பு-GCE AL-Scholarship Exam Dates-2nd Term School Holiday Announced

➡️ தரம் 5 புலமைப் பரிசில்: ஒக்டோபர் 11
➡️ க.பொ.த. உயர் தரம்: ஒக்டோபர் 12 - நவம்பர் 06
➡️ 2ஆம் தவணை விடுமுறை: ஒக்டோபர் 09 - நவம்பர் 16

க.பொ.த. உயர் தரப் பரீட்சை மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைகளுக்கான திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன்.

அதற்கமைய க.பொ.த. உயர் தரப் பரீட்சைகள் எதிர்வரும் ஒக்டோபர் 12ஆம் திகதி முதல் நவம்பர் 06ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளன.

கல்வி அமைச்சில் இன்று (20) முற்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இது அறிவிக்கப்பட்டது.

க.பொ.த. உயர் தரப் பரீட்சைகள் செப்டெம்பர் 07ஆம் திகதி முதல் ஒக்டோபர் 02ஆம் திகதி வரை இடம்பெறும் என கல்வி அமைச்சினால் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வழமையாக ஓகஸ்ட் மாதத்தின் முதல் வாரத்தில் உயர் தரப் பரீட்சைகள் இடம்பெறுவது வழக்கமாகும்.

இதேவேளை ஓகஸ்ட் மாதம் இடம்பெறும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை, எதிர்வரும் ஒக்டோபர் 11ஆம் திகதி, ஞாயிற்றுக்கிழமை இடம்பெறும் என, கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

ஏற்கனவே புலமைப்பரிசில் பரீட்சை செப்டெம்பர் 13 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெறும் என கல்வி அமைச்சர் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, பாடசாலைகளின் இரண்டாம் தவணை விடுமுறையை, ஒக்டோபர் 09ஆம் திகதி முதல் நவம்பர் 16ஆம் திகதி வரை வழங்கவும் அமைச்சு தீர்மானித்துள்ளது.

பாடசாலைகள் யாவும் தரம் 11, 12, 13 மாணவர்களுக்காக மாத்திரம் எதிர்வரும் ஜூலை 27ஆம் திகதி மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக, கல்வி அமைச்சு ஏற்கனவே அறிவித்துள்ளது.

ஏனைய தரங்களில் உள்ள மாணவர்களுக்கு தேர்தலின் பின் முதல் வாரத்தில், ஓகஸ்ட் 10 திங்கட்கிழமை பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.


Add new comment

Or log in with...