தேர்தல் செலவினம், புனர்வாழ்வு பணியகச் சட்டங்கள் நடைமுறைக்கு

- சான்றுரைப்படுத்தினார் சபாநாயகர்

பாராளுமன்றத்தில் அண்மையில் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட தேர்தல் செலவினத்தை ஒழுங்குபடுத்தல் சட்டமூலம் மற்றும் புனர்வாழ்வு பணியகச் சட்டமூலம் என்பவற்றில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தனது கையொப்பத்தையிட்டு அண்மையில் (24) சான்றுரைப்படுத்தினார்.

இதற்கமைய இந்தச் சட்டமூலங்கள் 2023ஆம் ஆண்டின் 2ஆம் இலக்க புனர்வாழ்வு பணியகச் சட்டம் மற்றும் 2023ஆம் ஆண்டின் 3ஆம் இலக்க தேர்தல் செலவினத்தை ஒழுங்குபடுத்தல் சட்டம் என்ற பெயரில் நடைமுறைக்கு வரும். 


Add new comment

Or log in with...