உள்நாட்டு இறைவரி திருத்தச் சட்டம் ஜனவரி முதல் நடைமுறையில்

- சபாநாயகர் சான்றுரைப்படுத்தினார்

பாராளுமன்றத்தில் அண்மையில் விவாதிக்கப்பட்டு திருத்தங்களுடன் மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்ட உள்நாட்டு இறைவரி (திருத்தச்) சட்டமூலத்தில் சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (19) தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப் படுத்தினார்.

கடந்த 09ஆம் திகதி பாராளுமன்றத்தில் நடைபெற்ற இச்சட்டமூலம் மீதான இரண்டாவது மதிப்பீட்டு விவாதத்தைத் தொடர்ந்து எதிர்க்கட்சியினர் விடுத்த கோரிக்கைக்கு அமைய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் சட்டமூலத்துக்கு ஆதரவாக 83 வாக்குகளும், எதிராக 41 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

இதன் பின்னர் சட்டமூலத்தின் மூன்றாவது மதிப்பீடு மீதான வாக்கெடுப்பில் இதற்கு ஆதரவாக 79 வாக்குகளும், எதிராக 36 வாக்குகளும் அளிக்கப்பட்டன. இதற்கமைய மேலதிக வாக்குகளால் உண்ணாட்டரசிறை (திருத்தச்) சட்டமூலம் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது.

இதற்கமைய இந்தச் சட்டமூலம் 2022ஆம் ஆண்டின் 45ஆம் இலக்க உண்ணாட்டரசிறை (திருத்தச்) சட்டமாக ஜனவரி 23 முதல் நடைமுறைக்கு வருகிறது.


Add new comment

Or log in with...