அறிகுறிகள் தெரிந்தால் அழைக்கவும் 011 7 966 366

அறிகுறிகள் தெரிந்தால் அழைக்கவும் 011 7 966 366-If-You-Hv-Any-Symptom-Call-0117-966-366-Major-General-Sanjeewa-Munajsinghe

கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான அறிகுறிகள் ஏதேனுமிருந்தால் மருத்துவமனைகளுக்கு வரும் முன், 011 7966366 எனும் இலக்கத்தை அழைக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

கொவிட்-19 பரவலைத் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தினால் விடுக்கப்பட்ட விசேட அறிவித்தலின்போது, சுகாதார அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் சஞ்ஜீவ முனசிங்கவினால் இவ்வறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அறிகுறிகள் தெரிந்தால் அழைக்கவும் 011 7 966 366-If-You-Hv-Any-Symptom-Call-0117-966-366-Major-General-Sanjeewa-Munajsinghe

அதற்கமைய, காய்ச்சல், இருமல், தடிமன், தொண்டை வலி உள்ளிட்ட அறிகுறிகள் காணப்படுமாயின், குறிப்பாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள பகுதிகளில் உள்ளவர்கள் தங்களுக்கு ஏற்படும் சந்தேகங்கள் தொடர்பில் தெரிவிக்க குறித்த இலக்கத்தை அழைக்குமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


Add new comment

Or log in with...