2017 A/L பரீட்சை; 163,104 பேர் பல்கலைக்கு விண்ணப்பிக்க தகுதி

 

- மீள்திருத்தம் ஜனவரி 15 வரை
- 205 பேரின் பெறுபேறுகள் இடைநிறுத்தம்

தற்போது வெளியிடப்பட்டுள்ள க.பொ.த. உயர் தர பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைய, இவ்வாண்டு கல்விப் பொதுத் தராதரப்பத்திர உயர் தர பரீட்சைக்கு, 2 இலட்சத்து 37,943 பாடசாலை பரீட்சார்த்திகள், 77,284 தனிப்பட்ட பரீட்சார்த்திகள் உள்ளிட்ட 3 இலட்சத்து 15,227 பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில், 1 இலட்சத்து 63,104 பேர் பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

அத்துடன் 205 பேரின் பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

அந்த வகையில் பரீட்சைக்கு விண்ணப்பித்த 51.74 வீதமான மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

இம்முறை உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் மீள் பரிசீலனைக்காக எதிர்வரும் ஜனவரி 15 ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்கலாம் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இவ்வருடம் உயர் தர பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் நாடளாவிய ரீதியில், ஒவ்வொரு துறை சார்பாகவும் முதல் மூன்று இடத்தை பிடித்துள்ள மாணவர்களின் பட்டியலை பரீட்சைத் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

அந்த வகையில், அகில இலங்கை ரீதியில் கணித பிரிவில் யாழ்ப்பாணம் - பருத்தித்துறை ஹாட்லி கல்லூரி மாணவன் சிறிதரன் துவாரகன் முதலாம் இடத்தை பெற்றுள்ளார்.

கணித பிரிவில் மூன்றாம் இடத்தை யாழ்ப்பாணம் புனித பட்ரிக் கல்லூரி மாணவன் ஜெயபாலன் போல் ஜோன்சன் பிடித்துள்ளார்.

வர்த்தகப் பிரிவில் கொழும்பு புனித போல் பெண்கள் பாடசாலை மாணவி பாத்திமா அகீலா இஸ்வர் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளார்.

அத்துடன் உயிரியல் தொகுதி தொழில்நுட்ப பிரிவில் யாழ்ப்பாணம், வேம்படி உயர் கல்லூரி மாணவி கமலேஸ்வரி செந்தில்நாதன் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளார்.

அகில இலங்கை ரீதியாக, ஒவ்வொரு துறையிலும் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களின் பட்டியல்

உயிரியல் பிரிவு
1. திலினி சந்துனிகா - சுஜாதா கல்லூரி, மாத்தறை
2. ஹசிதா கீத் குணசிங்க - ஜோசப் வாஸ் மத்திய கல்லூரி, வென்னப்புவ
3. இஷான் ஷாலுகா - ஆனந்த கல்லூரி, மருதானை

கணித பிரிவு
1. ஸ்ரீதரன் துவாரகன் - ஹார்ட்லி கல்லூரி, பருத்தித்துறை  (தமிழ்)
2. பமுதித ஹிமான் - கம்பஹா பண்டாரநாயக்க, கம்பஹா
3. ஜெயராஜன் போல் ஜோன்சன் - புனித பட்ரிக், யாழ்ப்பாணம் (தமிழ்)

வர்த்தக பிரிவு
1. துலனி ரன்சிகா - சுஜாதா கல்லூரி, மாத்தறை
2. கௌசல்யா சுபாஷினி - மியூசியஸ் கல்லூரி, கொழும்பு 07 (ஆங்கிலம்)
3. பாத்திமா அகீலா இஸ்வர் - புனித போல் பெண்கள் கல்லூரி, கொழும்பு 05

கலைப் பிரிவு
1. வண. பாத்பெரிய முனிந்தவங்ச தேரோ - சத்மாலங்கார பிரிவென, இரத்தினபுரி
2. சஹேலி ஆச்சனா - சி.எம்.எஸ். பாலிகா, கொழும்பு 07 (ஆங்கிலம்)
3. தில்கி சந்துபமா - பெர்குசன் உயர்நிலை பள்ளி பாலிகா, இரத்தினபுரி

பொறியியல் தொழில்நுட்பம்
1. பாரமி பிரசாதி - மஹிந்த ராஜபக்ஷ கல்லூரி, மாத்தறை
2. பிரகதி இஷான் மதுசங்க - நாரந்தெனிய மத்திய கல்லூரி, கம்புறுபிட்டிய
3. பசிந்து லக்‌ஷான் - மயூரபாத மத்திய கல்லூரி, நாரம்மலை

உயிரியல் தொகுதி தொழில்நுட்பம்
1. லக்ஷிகா சத்துரங்க - சீவலி மத்திய கல்லூரி, இரத்தினபுரி
2. ரமேஷா ஸ்ரீமலி - தெபரவெவ மத்திய கல்லூரி, திஸ்ஸமஹாராம
3. கமலேஷ்வரி செந்தில்நாதன் - வேம்படி உயர்நிலைப் பள்ளி, யாழ்ப்பாணம் (தமிழ்)

பொது / ஏனையவை
1. ஹிருணி ஷக்யா - தேவி பாலிகா வித்யாலயம், கொழும்பு
2. ஷவீன் பாஷித - றோயல் கல்லூரி, கொழும்பு 07
3. டியோல் பிரெண்டன் அந்தனி - டி மெஷனொட் கல்லூரி, கந்தான

தங்களது பெறுபேறுகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள, விசேட தொலைபேசி இலக்கங்களையும் பரீட்சைத் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

1911
0112784201
0112784537
0113188350
0113140314
 

Add new comment

Or log in with...