2017 A/L பெறுபேறுகள் இணையத்தில் வெளியாகின (UPDATE)

 

2017 க.பொ.த. உயர் தர பரீட்சை பெறுபேறுகள் சற்று முன்னர் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

பெறுபேறுகளை,

www.doenets.lk அல்லது www.results.exams.gov.lk எனும் பரீட்சை திணைக்களத்தின் இணையத்தில் இலவசமாக அறிந்துகொள்ள முடியும்.

 


2017 A/L பெறுபேறுகள் இன்று வெளியாகிறது (4.03pm)

- O/L கணித பாடத்திற்கு விசேட புள்ளி வழங்கல் திட்டம்

இவ்வாண்டு (2017) இடம்பெற்ற கல்விப் பொதுத் தராதரப்பத்திர உயர் தர பரீட்சை பெறுபேறுகள் இன்று நள்ளிரவு இணையத்தளத்தில் வெளியிடப்படவுள்ளதாக பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதற்கமைய www.doenets.lk எனும் பரீட்சைத் திணைக்களத்தின் இணையத்தளத்தில் அதனை பார்வையிடலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

2017 ஓகஸ்ட் மாதம் 08 முதல் செப்டெம்பர் 02 ஆம் திகதி வரை இடம்பெற்ற உயர் தர பரீட்சை, நாடு முழுவதிலுமுள்ள 2,230 மத்திய நிலையங்களில் இடம்பெற்றதோடு, இதில் 3 இலட்சத்து 15,227 பேர் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இவ்வாண்டு இடம்பெற்ற க.பொ.த சாதாரண தர பரீட்சையின் கணித பாட பரீட்சை வினாத்தாளில், ஒரு சில கேள்விகளுக்கான புள்ளி வழங்குவதில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது.

கணித பாட வினாத்தாளுக்கு விடையளிக்கும்போது, மாணவர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டதாக, பல்வேறு அரசியல்வாதிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் கருத்துத் தெரிவித்திருந்தன.

குறித்த விடயம் தொடர்பில் பரீட்சைகள் ஆணையாளரிடம், கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் தொடர்பு கொண்டு விசாரித்துள்ளார். அதற்கமைய கணித வினாத்தாளை தயாரித்த பரீட்சை பரிசோதகர்களுடன் இது தொடர்பில் கலந்துரையாடலொன்றையும் மேற்கொண்டுள்ளதாக கல்வியமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

அதன் அப்படையில், கணித பாட வினாத்தாளில் காணப்பட்ட பிரச்சினைகள் தொடர்பில் புள்ளிகள் வழங்கும் விதிமுறையில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

 


Add new comment

Or log in with...