இந்தியாவிடமிருந்து 100 கோடி டொலர் கடன்; ஒப்பந்தம் கைச்சாத்து

இந்தியாவிடமிருந்து 100 கோடி டொலர் கடன்; ஒப்பந்தம் கைச்சாத்து-USD 1 Billion Loan From India-MoU-Agreement Signed

இலங்கைக்கு 1 பில்லியன் (100 கோடி டொலர்) டொலர் கடனுதவி வழங்கும் ஒப்பந்தத்தில் இந்தியா கைச்சாத்திட்டுள்ளது.

இரு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள நிதி அமைச்சர் பசில் ராஜபக்‌ஷ இன்றையதினம் (17) இந்திய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் மற்றும் மத்திய வெளிவிவகார அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர் ஆகியோரை புது டில்லியில் வைத்து சந்தித்து கலந்துரையாடினர்.

இந்தியாவிடமிருந்து 100 கோடி டொலர் கடன்; ஒப்பந்தம் கைச்சாத்து-USD 1 Billion Loan From India-MoU-Agreement Signed

இதன்போது பரஸ்பர நலன் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பின் பரந்த அளவிலான பிரச்சினைகள் குறித்து அமைச்சர்கள் கலந்துரையாடியதாக இந்திய உயர் ஸ்தானிகராலாயம் விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு உணவு, மருந்து மற்றும் ஏனைய அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்வதற்காக 1 பில்லியன் டொலர் (100 கோடி டொலர்) கடன் வசதி தொடர்பில் இந்தியாவின் SBI (State Bank of India) மற்றும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் இவ்வொப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இந்தியாவிடமிருந்து 100 கோடி டொலர் கடன்; ஒப்பந்தம் கைச்சாத்து-USD 1 Billion Loan From India-MoU-Agreement Signed

குறித்த ஒப்பந்தத்தில் இலங்கை அரசாங்கம் சார்பில் நிதியமைச்சின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல மற்றும் இந்திய நிதியமைச்சுகளினதும் செயலாளர்கள் கைச்சாத்திட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவிடமிருந்து 100 கோடி டொலர் கடன்; ஒப்பந்தம் கைச்சாத்து-USD 1 Billion Loan From India-MoU-Agreement Signed

இதேவேளை, பெற்றோலியப் பொருட்களுக்காக இலங்கைக்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவியை (இந்திய ரிசர்வ் வங்கி (RBI)) இந்தியா ஏற்கனவே அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Add new comment

Or log in with...