17 அமைச்சரவை அமைச்சர்கள் பதவிப்பிரமாணம்

- பிரதமர் உள்ளிட்ட 20 பேர் தற்போது அமைச்சரவையில்
- டக்ளஸ் தேவானந்தா மீன்பிடி; ஹாபிஸ் நசீர் சுற்றாடல்
- ஜோன்ஸ்டனுக்கு அமைச்சு பதவி இல்லை
- அமைச்சரவையை விழித்து ஜனாதிபதியின் உரை இன்று இரவு 7.30 மணிக்கு

17 அமைச்சர்கள் கொண்ட புதிய அமைச்சரவை ஜனாதிபதி முன்னிலையில் இன்று (18) முற்பகல் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளது.

இதில் டக்ளஸ் தேவானந்தா, அவர் ஏற்கனவே வகித்த மீன்பிடி அமைச்சராக மீண்டும் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

இதேவேளை, ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஹாபிஸ் நசீர் அஹமட் சுற்றாடல் அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, அண்மையில் அமைச்சரவை உறுப்பினர்கள் தங்களது பதவிகளை இராஜினாமா செய்த நிலையில், மீண்டும் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டிருந்த அலி சப்ரி, ஜீ.எல். பீரிஸ், தினேஷ் குணவர்தன, ஜோன்ஸ்டன் பெனாண்டோ ஆகியோரில், ஜோன்ஸ்டன் பெனாண்டோ வகித்த அமைச்சு பதவி கனக ஹேரத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சராக இருந்த தினேஷ் குணவர்தனவுக்கு பொது நிர்வாகம், உள்ளூராட்சி சபைகள் மற்றும் மாகாண சபை அமைச்சுப் பதவி வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன், சர்வதேச நாணய நிதியத்திற்கு பேச்சுவார்த்தைக்காக சென்றுள்ள நிதி அமைச்சர் அலி சப்ரி மற்றும் வெளி விவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் ஆகியோரது அமைச்சுகளில் மாற்றங்கள் இல்லை என, ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அதற்கமைய, தற்போது பிரதமர் உள்ளிட்ட 20 பேர் அமைச்சரவையில் அங்கம் வகிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, புதிய அமைச்சரவையை விழித்து ஜனாதிபதி ஆற்றிய உரை இன்று இரவு 7.30 மணிக்கு இடம்பெறவுள்ளதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. 

1. தினேஷ் குணவர்தன - பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி

2. டக்ளஸ் தேவானந்தா - கடற்றொழில்

3. ரமேஷ் பத்திரண- கல்வி மற்றும் பெருந்தோட்டம்

4. பிரசன்ன ரணதுங்க - பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் சுற்றுலா

5. திலும் அமுனுகம - போக்குவரத்து மற்றும் கைத்தொழில்

6. கனக ஹேரத் - நெடுஞ்சாலைகள்

7. விதுர விக்ரமநாயக்க - தொழில்

8. ஜனக வக்கும்புர - விவசாயம் மற்றும் நீர்பாசனம்

9. செஹான் சேமசிங்க - வர்த்தகம் மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி

10. மொஹான் பிரியதர்ஷன டி சில்வா - நீர் வழங்கல்

11. விமலவீர திஸாநாயக்க - வனசீவராசிகள் மற்றும் வனவள பாதுகாப்பு

12. கஞ்சன விஜேசேகர - மின்சக்தி மற்றும் எரிசக்தி

13. தேனுக விதானகமகே - விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரம்

14. நாலக கொடஹேவ - வெகுசன ஊடகம்

15. சன்ன ஜயசுமண - சுகாதாரம்

16. ஹாபிஸ் நசீர் அஹமட் - சுற்றாடல்

May be an image of 2 people, people standing and indoor

17. பிரமித பண்டார தென்னகோன் - துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை


Add new comment

Or log in with...