பசில் ராஜபக்‌ஷவை எம்.பியாக பரிந்துரை செய்து தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு ஆவணம்

பசில் ராஜபக்‌ஷவை எம்.பியாக பரிந்துரை செய்து தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு ஆவணம்
ஜயந்த கெட்டகொட எம்.பி. பதவியிலிருந்து விலகும் இராஜினாமா கடிதத்தை இன்றையதினம் (06) பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தஸநாயக்கவிடம் கையளித்த போது....

- அதி விசேட வர்த்தமானி வெளியிட நடவடிக்கை

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொட இராஜினாமா செய்தமையால் ஏற்பட்ட தேசிய பட்டியல் எம்.பி. பதவிக்கு, பசில் ராஜபக்ஷவின் பெயர் பரிந்துரைக்கப்பட்ட ஆவணங்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு கிடைக்கப்பெற்றுள்ளன.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் இதனை உறுதிப்படுத்தியுள்ளதோடு, தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்கள் கூடி இது தொடர்பான அதி விசேட வர்த்தமானியில் கையொப்பமிட்டதைத் தொடர்ந்து அவ்வர்த்தமானி, அரசாங்க அச்சக திணைக்களத்தால் அச்சிடப்பட்டு வெளியிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜயந்த கெட்டகொட தான் எம்.பி. பதவியிலிருந்து விலகும் இராஜினாமா கடிதத்தை இன்றையதினம் (06) பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தஸநாயக்கவிடம் கையளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் இவ்வாரம் பசில் ராஜபக்‌ஷ, பாராளுமன்ற உறுப்புரிமையை பெறுவார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.


Add new comment

Or log in with...