Monday, March 8, 2021 - 12:36pm
முன்னாள் அமைச்சர் பாட்டாலி சம்பிக ரணவக்க உள்ளிட்டோருக்கு எதிராக, சட்ட மாஅதிபர் தாக்கல் செய்த வழக்கை எதிர்வரும் மே 31 இல் விசாரணை செய்ய கொழும்பு மேல் நீதிமன்றம் திகதி நிர்ணயித்துள்ளது.
கடந்த 2016இல் இராஜகிரியவில் இடம்பெற்ற விபத்து தொடர்பில் போலியான சாட்சியங்களை தயார் செய்ததாக, பாட்டலி சம்பிக ரணவக்க உள்ளிட்டோருக்கு எதிராக குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதோடு, அது தொடர்பில் குற்றப்பத்திரமும் அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Add new comment