உயிர்த்த ஞாயிறு அறிக்கை அஸ்கிரிய, மல்வத்து பீடங்கள், கர்தினாலுக்கும் வழங்கி வைப்பு

உயிர்த்த ஞாயிறு அறிக்கை அஸ்கிரிய, மல்வத்து பீடங்கள், கர்தினாலுக்கும் வழங்கி வைப்பு-Easter Sunday Attack PCoI Report Handed Over to Cardinal-Asgiriya-Malwathu Chapters

ஜனாதிபதியிடம் அண்மையில் கையளிக்கப்பட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை, அஸ்கிரிய, மல்வத்து மகாநாயக்க தேரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

உயிர்த்த ஞாயிறு அறிக்கை அஸ்கிரிய, மல்வத்து பீடங்கள், கர்தினாலுக்கும் வழங்கி வைப்பு

இன்று (01) முற்பகல் மல்வத்து பீட மகாநாயக்கர், சங்கைக்குரிய திப்பட்டுவாவே ஶ்ரீ சுமங்கள தேரர் மற்றும் அஸ்கிரிய பீட மகாநாயக்க தேரர் சங்கைக்குரிய வரகாகொட ஶ்ரீ ஞானரத்ன தேரர் ஆகியோருக்கு அந்தந்த விகாரைகளில் வைத்து, குறித்த அறிக்கையின் பிரதிகள், வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

உயிர்த்த ஞாயிறு அறிக்கை அஸ்கிரிய, மல்வத்து பீடங்கள், கர்தினாலுக்கும் வழங்கி வைப்பு

இதேவேளை, குறித்த அறிக்கையின் மற்றுமொரு பிரதி, பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகைக்கும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இன்று (01) பிற்பகல் கொழும்பில் உள்ள பேராயர் இல்லத்தில் வைத்து குறித்த பிரதி, அவருக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு அறிக்கை அஸ்கிரிய, மல்வத்து பீடங்கள், கர்தினாலுக்கும் வழங்கி வைப்பு

ஜனாதிபதியின் சட்ட விவகாரப் பணிப்பாளர் நாயகம் ஹரிகுப்த ரோஹணதீரவினால் குறித்த பிரதிகள் கையளிக்கப்பட்டதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Add new comment

Or log in with...