கட்டார் வாழ் இலங்கை பிரஜைகள் அரசாங்கத்திடம் வேண்டுகோள்

கட்டார் வாழ் இலங்கை பிரஜைகள் அரசாங்கத்திடம் வேண்டுகோள்-17 Sri Lankan in Qatar Request President to Repatriate

கட்டாரில் வேலைவாய்ப்பிற்காக சென்று, சிக்கியுள்ள இலங்கை பிரஜைகள் 17 பேர், தங்களை நாட்டுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

கட்டார் நாட்டுக்கு வந்து கொரோனா தொற்று காராணமாக, வேலை வாய்ப்பை இழந்துள்ளதோடு, நாடு திரும்ப முடியாமல் கடந்த 6 மாத காலமாக தவிப்பதாக தெரிவிக்கும் இவர்கள், தினகரன் இணையத்தை தொடர்பு கொண்டு இலங்கை அரசாங்கத்திற்கு இச்செய்தியை எத்தி வைக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

"தயவு செய்து இலங்கை அரசு எங்கள் குடும்ப சூழ்நிலையை கருத்திற் கொண்டு மீள இலங்கைக்கு அழைக்குமாரு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறோம்" என இவர்கள் தமது கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

"ஜனாதிபதியவர்களே, எமது குடும்பம் அநாதரவாகியுள்ளது", "ஜனாதிபதியவர்கள, எவ்வாறாவது எம்மை இலங்கைக்கு அழைத்து வர நடவடிக்கை எடுங்கள்", "எவ்வாறாவது எம்மை இலங்கைக்கு அழைக்கவும்", "நாம் இலங்கைக்கு எவ்வாறாக வர விரும்புகிறோம்" எனும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் அவர்கள் எமக்கு புகைப்படமொன்றை அனுப்பி வைத்துள்ளார்கள்.

எனவே பொறுப்பு வாய்ந்த ஊடகம் எனும் வகையில், உரிய அதிகாரிகள் இவர்களை தொடர்பு கொண்டு, இவர்களை இலங்கைக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்குமாறு, கேட்டுக் கொள்கிறோம்.

கட்டாரின் உம் பாப் (Umm Bab) இலுள்ள, அல்காலிஜ் சீமெந்து தொழிற்சாலையில் (Al Khalij Cement Company) இவர்கள் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளதோடு, இவர்களை தொடர்பு கொள்ளுமாறு, +97466732391 எனும் இலக்கத்தை வழங்கியுள்ளார்கள்.


Add new comment

Or log in with...