மேல் மாகணத்தில் திங்கள் அதிகாலை வரை ஊரடங்கு

மேல் மாகணத்தில் நாளை நள்ளிரவு முதல் திங்கள் அதிகாலை வரை ஊரடங்கு-Quarantine Curfew in Western Province-From Oct 30-Nov 02

ஊரடங்கு காரணமாக, நாளை மருந்தகங்கள், உணவு விற்பனை நிலையங்கள் திறப்பு

நாளை நள்ளிரவு (30) (வெள்ளிக்கிழமை 00:00) முதல் எதிர்வரும் நவம்பர் 02 திங்கட்கிழமை அதிகாலை 5.00 மணி வரை கொழும்பு, கம்பஹா, களுத்துறை ஆகிய மேல் மாகாணத்திலுள்ள அனைத்து இடங்களிலும் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படவுள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் பரிந்துரையின் பேரில், இவ்வாறு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக, கொவிட்-19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் அறிவித்துள்ளது.

ஆயினும், இவ்வறிவிப்பை வெளியிடும் நேரத்தில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு விதிக்கப்படாத பகுதிகளில் மாத்திரமே எதிர்வரும் நவம்பர் 02 ஆம் திகதி அதிகாலை 5.00 மணிக்கு ஊரடங்கு உத்தரவு நீக்கப்படும் என சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

அதற்கமைய, தற்போது ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டுள்ள பகுதிகளில், நவம்பர் 02, திங்கட்கிழமை அதிகாலை 5.00 மணிக்குப் பின்னர், மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு தொடரும் என, கொவிட்-19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் அறிவித்துள்ளது.

இதேவேளை, மேல் மாகாணத்தில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஊரடங்கு உத்தரவு அமுலில் உள்ளதால், ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் அத்தியாவசிய உணவு பொருட்கள் மற்றும் மருந்தகங்களை நாளை (29) காலை 8.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை திறந்து வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே அறிவிக்கப்பட்ட வகையில், நவம்பர் 02 ம் திகதி, ஒவ்வொரு மாவட்டத்திலும் ஊரடங்கு உத்தரவு பகுதிகளில் உணவு மற்றும் மருந்தகங்கள் வாரத்தில் இரண்டு நாட்கள் திறந்திருக்கும்.

மருந்தகங்கள், அத்தியாவசிய உணவு பொருட்கள் விற்பனை நிலையங்கள் திறக்கும் தினங்கள்
கம்பஹா, களுத்துறை: திங்கள், வியாழக்கிழமை
கொழும்பு, குருணாகல் : செவ்வாய், வௌ்ளிக்கிழமை

PDF File: 

Add new comment

Or log in with...