தடைப்பட்ட மின்சார விநியோகம் வழமைக்கு

தடைப்பட்ட மின்சார விநியோகம் வழமைக்கு-Power Cut-75 pcnt Restored-CEB

- நாட்டின் கட்டமைப்பில் சுமார் 75% விநியோகம் வழமைக்கு

நாடு முழுவதும் இன்று (17) பிற்பகல் 12.30 மணி முதல் ஏற்பட்ட மின்சாரத் தடை தற்போது படிப்படியாக வழமைக்கு திரும்புவதாக, இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் பொறியியலாளர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

தற்போது நாட்டின் மின்சாரக் கட்டமைப்பில் சுமார் 75% சீரடைந்துள்ளதாகவும் பெரும்பாலான பகுதியில் மின்சார விநியோகம் வழமைக்கு திரும்பியுள்ளதாகவும், இன்னும் சொற்ப நேரத்தில் நாடு முழுவதும் மின்சார விநியோகம் வழமைக்கு கொண்டு வரப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மின்சார தடைக்கான காரணம் கண்டறிந்து அமைச்சிற்கும், பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவிற்கும் உரிய வகையில் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் எனவும் அதன் அடிப்படையில் எதிர்காலத்தில் இவ்வாறான விடயம் இடம்பெறாத வகையிலான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


Add new comment

Or log in with...