3,150 போதைப்பொருள் முத்திரை; சந்தேகநபருக்கு விளக்கமறியல்

போதைப்பொருளினால் தயாரிக்கப்பட்ட முத்திரைகளை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஒருவரை, எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 08ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

போதைப்பொருளினால் தயாரிக்கப்பட்ட LSD முத்திரைகள் 3,150 ஐ, தனது உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் இச்சந்தேகநபர் நேற்று (23) கைது செய்யப்பட்டிருந்தார்.

கொள்ளுப்பிட்டி, பகத்தலே வீதியில் அமைந்துள்ள விடுதியொன்றில் வைத்தே இச்சந்தேகநபர் கைது செய்யப்பட்டிருந்தார்.

இது தொடர்பில் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய, குறித்த பகுதியில் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.

இதனைத் தொடர்ந்து குறித்த முத்திரைகளுடன் இச்சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இச்சந்தேகநபரை புறக்கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் நேற்று (23) முன்னிலைப்படுத்தியபோது, அவருக்கு இவ்வாறு விளக்கமறியல் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.


Add new comment

Or log in with...