ஐஸ் உடன் மதுவரித் திணைக்கள அதிகாரி உட்பட 8 பேர் கைது

- மற்றொருவரை தேடி வலை வீச்சு

ஐஸ் போதைப்பொருளுடன் மதுவரித் திணைக்கள அதிகாரி ஒருவர் உட்பட 08 பேர் இன்று (23)  அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

புத்தளம் ஊழல் ஒழிப்பு பிரிவு அதிகாரிகள் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போது, இச்சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளவர்களில் 04 பெண்கள் அடங்குவதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது, 200 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த போதைப்பொருளை சந்தேகநபர்களுக்கு பெற்றுக்கொடுத்ததாக கூறப்படும் மற்றுமொரு மதுவரித் திணைக்கள அதிகாரியை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.


Add new comment

Or log in with...