மலசல குழியில் பெண்ணின் சடலம்; சிவில் பாதுகாப்பு படை வீரர் கைது

மலசல குழியில் பெண்ணின் சடலம்; சிவில் பாதுகாப்பு படை வீரர் கைது-Women Dead-Civil Defence Force Soldier Arrested

திருகோணமலை, கல்மெடியாவ பகுதியில் மலசலகூட குழிக்குள் சடலமொன்று கண்டெடுக்கப்பட்டமை தொடர்பில் சிவில் பாதுகாப்பு படை வீரரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தம்பலகாமம்  பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் கந்தளாய், வான் எல பகுதியைச் சேர்ந்த 40 வயதுடையவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது, தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்மெடியாவ பகுதியில் மலசல கூடத்திற்கு வெட்டப்பட்டிருந்த குழிக்குள் இருந்து துர்நாற்றம் வீசுவதாக பொலிசாருக்கு வழங்கப்பட்ட தகவலையடுத்து அப்பகுதிக்குச் சென்ற பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.

மினுவாங்கொட பகுதியைச் சேர்ந்த இந்திராணி வில்லவாணி  (51) எனும் பெண்ணுடன் குறித்த சந்தேகநபர் கடந்த 2018ஆம் ஆண்டு தொடக்கம்  வசித்து வந்ததாகவும் கடந்த 28 ஆம் திகதி இருவருக்குமிடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் மண்வெட்டியால் தாக்கிய நிலையில் அவர் மரணமடைந்ததையடுத்து, மலசல கூடத்திற்காக வெட்டப்பட்ட குழிக்குள் சந்தேகநபர் சடலத்தை போட்டுள்ளதாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

சடலம் தற்பொழுது போடப்பட்ட குழிக்குள் காணப்படுவதாகவும் கந்தளாய் நீதவான் பார்வையிட்ட பின்னர்  சட்ட வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்த உள்ளதாகவும் புலன் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.

(ரொட்டவெவ குறூப் நிருபர் - அப்துல்சலாம் யாசீம்)


Add new comment

Or log in with...