பருவச்சீட்டு, சேவை அடையாள அட்டை உள்ளவர்களுக்கு மாத்திரம் பயணிக்கலாம்

புகையிரத சேவைகள் நாளையதினம் (20) ஆரம்பிக்கப்படும் நிலையில்,  உத்தியோகபூர்வ அடையாள அட்டை மற்றும் புகையிரத பருவச்சீட்டை வைத்திருக்கும் பயணிகள் மாத்திரமே புகையிரதத்தில் பயணிக்க முடியும் என, புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்தோடு தற்போது ஊரடங்குச் சட்டம் அமுலிலுள்ள கொழும்பு, கம்பஹா, களுத்துறை மாவட்டங்களில் புகையிரத,  பஸ் சேவைகளை முன்னெடுக்க வேண்டாம் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, அமைச்சர் மஹிந்த அமரவீரவுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

இதன் பிரகாரம் எதிர்வரும் 22ஆம் திகதி வரை ஊரடங்குச் சட்டம் அமுலிலுள்ள மாவட்டங்களில் புகையிரத, பஸ் சேவைகள் இடம்பெறாது என, அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.


Add new comment

Or log in with...