4 மாத குழந்தை உள்ளிட்ட ஒரே குடும்பத்தின் ஐவருக்கு கொரோனா தொற்று

4 மாத குழந்தை உள்ளிட்ட ஒரே குடும்பத்தின் ஐவருக்கு கொரோனா தொற்று-5 in Same Family Positive for COVID19 including 4 months Baby

- இலங்கையில் முதலாவது வயது குறைந்த கொரோனா நோயாளி பதிவு
- குடும்பத்தில் 6 பேர் IDH இல் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஐவர் அடையாளம்

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக, சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்தார்.

இவர்கள் நேற்று (29) அடையாளப்படுததப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இவர்களில் 4 மாத குழந்தையொன்றும் உள்ளடங்குவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

அந்த வகையில், இலங்கையில் அடையாளம் காணப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான வயது குறைந்தவராக இக்குழந்தை அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

இவர்கள், புத்தளம் மாவட்டத்தின் நாத்தாண்டி, சிலாபம் பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக்குழந்தைக்கு, அவரது பாட்டன் மூலம் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை தெரிய வந்துள்ளதாக, சுகாதார பரிசோதகர் சங்கம் தெரிவித்துள்ளது.

குறித்த நபர் இந்தியாவிற்கு சென்று திரும்பியிருந்தவர் என்பதோடு, கொவிட்19 நோய் அறிகுறிகளை மறைத்து தனிமைப்படுத்தலைத் தவிர்த்து வந்த ஒருவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த குடும்பத்தின் 6 பேர் IDH வைத்தியசாலையில் மருத்துவ கண்காணிப்பில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர்களில் ஐவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

எனவே, தனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்படாதவர்கள் உடனடியாக (113, 117, 119, 011 309 0502 உள்ளிட்ட தொலைபேசிகளை) தொடர்பு கொள்ளுமாறு  அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


Add new comment

Or log in with...