புதிய மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க; நிதியமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன

புதிய மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க; நிதியமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன-CBSL-New-Governor-Dr-Nandalal-Weerasinghe-Secretary-to-the-FM-Mahinda-Siriwardena

- ஜனாதிபதியினால் இன்று நியமனம்

இலங்கை மத்திய வங்கியின் புதிய ஆளுநராக கலாநிதி பீ. நந்தலால் வீரசிங்கவும், நிதி அமைச்சின் புதிய செயலாளராக கே.எம்.எம். சிறிவர்தனவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான நியமனக் கடிதங்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இன்று (07) பிற்பகல் கையளிக்கப்பட்டன.

புதிய மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க; நிதியமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன-CBSL-New-Governor-Dr-Nandalal-Weerasinghe-Secretary-to-the-FM-Mahinda-Siriwardena

நிதித்துறையில் பரந்த அனுபவமுள்ள கலாநிதி நந்தலால் வீரசிங்க, சர்வதேச நாணய நிதியத்தின் மாற்றீடு நிறைவேற்றுப் பணிப்பாளராகவும், இலங்கை மத்திய வங்கியின் பொருளாதார ஆராய்ச்சிப் பணிப்பாளராகவும், உதவி ஆளுநராகவும், சிரேஷ்ட பிரதி ஆளுநராகவும் பதவி வகித்துள்ளார்.

நந்தலால் வீரசிங்க, கொழும்பு பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டதாரி விரிவுரையாளராகவும், மலேசியாவில் உள்ள SEACEN மையத்தில் வருகைதரு ஆராய்ச்சி பொருளாதார நிபுணராகவும் உள்ளார். அவுஸ்திரேலியாவின் தேசிய பல்கலைக்கழகத்தின் Crawford யில் உள்ள பொதுக் கொள்கை மற்றும் பயன்பாட்டு பேரண்ட பொருளாதார பகுப்பாய்வு மையத்தின் ஆலோசனைக் குழுவின் உறுப்பினராகவும் உள்ளார்.

புதிய மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க; நிதியமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன-CBSL-New-Governor-Dr-Nandalal-Weerasinghe-Secretary-to-the-FM-Mahinda-Siriwardena

நிதி அமைச்சின் புதிய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள கே.எம்.எம். சிறிவர்தன, இலங்கை, இந்தியா, பங்களாதேஷ், பூட்டான் ஆகிய நாடுகளுக்கான சர்வதேச நாணய நிதியத்தின் மாற்றீடு நிர்வாக பணிப்பாளராக பதவி வகித்துள்ளதோடு, அவர் நிதி அமைச்சின் பொது நிதித் துறையின் பணிப்பாளர் நாயகமாகவும், தேசிய திட்டமிடல் திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகமாகவும் பணியாற்றியுள்ளார்.

கே.எம்.எம். சிறிவர்தன, பேரண்ட பொருளாதார முகாமைத்துவம், பேரண்ட பொருளாதார பொருளாதார எதிர்வுகூறல், நாணயக் கொள்கை, மத்திய வங்கியியல், நிதி முகாமைத்துவம், பொதுக் கடன் முகாமைத்துவம், நிதி நிரற்படுத்தல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சர்வதேச பயிற்சிகளைப் பெற்றுள்ளார்.

இந்நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத்தும் கலந்துகொண்டார்.

Add new comment

Or log in with...