கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் கட்சிச் சின்னங்களில் இரு சின்னங்கள் நீக்கம்

கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் கட்சிச் சின்னங்களில் இரு சின்னங்கள் நீக்கம்-Election Commission Removes Two Political Party Symbols

- தேர்தல்கள் ஆணைக்குழு அதி விசேட வர்த்தமானி வெளியீடு

அரசியல் கட்சிகளுக்கு ஒதுக்கப்படாமலுள்ள கட்சி சின்னங்களின் பட்டியலில் இருந்து இரண்டு சின்னங்கள் நீக்கப்படுவதாக, தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இது தொடர்பிலான அதி விசேட வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டுள்ள ஆணைக்குழு இதனை அறிவித்துள்ளது.

அதற்கமைய, குறித்த பட்டியலில் இருந்து கிரீடம் மற்றும் விவசாயி ஆகிய சின்னங்கள் நீக்கப்பட்டுள்ளன.

குறித்த இரண்டு சின்னங்களும் நாட்டின் தேசிய சின்னங்களுக்கு ஒத்ததாக அமைந்திருப்பதால் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதற்கமைய, குறித்த சின்னங்கள் அரசியல் கட்சிகளுக்கான சின்னங்களாக எதிர்காலத்தில் வழங்கப்படாது எனவும், அதை அவ்வாறு பயன்படுத்தாதிருக்கவும் ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கு முன்னர் 'அரசியல் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டில்லா சின்னங்கள்' எனும் பட்டியலின் கீழ் வகைப்படுத்தப்பட்டு, கடந்த ஜனவரியில் அதி விசேட வர்த்தமானி (2263/24) அறிவித்தல் வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

PDF File: 

Add new comment

Or log in with...