மேலும் 14 பேருக்கு வேகமாக பரவும் டெல்டா திரிபு அடையாளம்

மேலும் 14 பேருக்கு வேகமாக பரவும் டெல்டா திரிபு அடையாளம்-14 More Delta Variant Infectd Persons Identified in Colombo-Galle-Matara-Trincomalee

வேகமாக பரவும் டெல்டா கொவிட் திரிபு தொற்றைக் கொண்ட மேலும் 14 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சுகாதார சேவைகளின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ஹேரத் இதனை தெரிவித்தார்.

கொழும்பு, காலி, மாத்தறை, திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் குறித்த நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே டெல்டா கொவிட் திரிபுடைய தொற்றாளர்கள் நால்வர் அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, மேற்கொண்ட சோதனைகளின் அடிப்படையில், டெல்டா திரிபு தொற்றைக் கொண்ட 18 பேர் இது வரை அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மிக வேகமாக பரவும் டெல்டா கொவிட் வைரஸ் திரிபு இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், தடுப்பூசி பெற்றவர்கள் மற்றும் பகுதியளவில் தடுப்பூசி பெற்றவர்களுக்கு பாதிப்பாக அமையுமென, ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நீர்ப்பீடனம் மற்றும் கல உயிரியல் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...