DARAZ - Dialog Finance PLC இணைந்து சிறிய மற்றும் நடுத்தர வணிகங்களை மேம்படுத்த கைகோர்க்கின்றன

தெற்காசியாவின் துரிதமாக வளர்ந்து வரும் ஒன்லைன் சந்தைகளில் ஒன்றான Daraz, சமீபத்தில் Daraz தளத்தில் சிறிய மற்றும் நடுத்தர விற்பனையாளர்களுக்கு விற்பனையாளர் கடன் வசதிகளை வழங்குவதற்காக, இலங்கையின் முன்னணி டிஜிட்டல் நிதி நிறுவனமான Dialog Finance PLC உடன் இணைந்;துள்ளது. இந்தக் கூட்டாண்மையானது இலங்கையில் சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்களின் (SMEs) வளர்ச்சியை எளிதாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது, அவர்களுக்கு அவர்களின் வியாபாரத்தை விரிவுபடுத்த தேவையான நிதி ஆதாரங்களை வழங்குகிறது.

இந்த கூட்டாண்மையின் கீழ், Dialog Finance PLC, Daraz தளத்தின் விற்பனையாளர்களுக்கு, தளத்தில் அவர்களின் தயாரிப்பு வகைப்படுத்தலை விரிவுபடுத்துவதற்கும் அவர்களின் ஒன்லைன் விற்பனைநிலைய முகப்பினை மற்றும் இருப்பை உயர்த்துவதற்கும் பயன்படுத்தக் கூடிய செயல்பாட்டு மூலதன நிதியுதவியை விரிவுபடுத்தும். இது இலத்திரனியல் தள விற்பனையாளர்கள் அதிகமானவர்களை ஈர்க்கவும், அவர்களின் விற்பனை வருவாயை அதிகரிக்கவும், பரந்த வாடிக்கையாளர் தளத்தை அடையவும் மற்றும் அவர்களின் வணிகங்களை வளர்க்கவும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டிஜிட்டல் நிதியியல் பொறிமுறையானது விரைவான திருப்பங்கள் மற்றும் விரைவான செயலாக்கத்தை உறுதி செய்வதோடு, இது இந்தத் துறைக்கு கிடைக்கும் பாரம்பரிய கடன் வசதிகளை விடவும் மிகவும் வசதியாக அணுகக்கூடியதாக இருக்கும்.

பங்காளித்துவத்தைப் பற்றி பேசிய Daraz Sri Lanka இன் முகாமைத்துவப் பணிப்பாளர் திரு. ரக்கில் பெர்னாண்டோ, "எங்கள் தளத்தில் விற்பனையாளர்களுக்கு மிக முக்கிய தேவையான நிதியுதவிக்கான அணுகலை வழங்க Dialog Finance PLC உடன் கைகோர்ப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். கடினமான பொருளாதார நிலைமைகளின் போதும், செலவுத் திறன், பரந்த சந்தை அணுகல் மற்றும் தரவு பகுப்பாய்வுகளை செயல்படுத்துவதன் மூலம் சிறிய மற்றும் நடுத்தர தொழில்முனைவோர்களுக்கான வளர்ச்சி வாய்ப்புகள், வணிக எண்ணம் கொண்ட தொழில்முனைவோர்களுடன் இது போன்ற கூட்டாண்மைகள் இந்த முயற்சிகளை மேலும் வலுப்படுத்தி, இலங்கை மற்றும் தெற்காசிய பிராந்தியத்தில் உள்ள பல்வேறு சமூகங்களுக்கு புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட தீர்வுகளை உருவாக்க உதவுகின்றன." எனக் குறிப்பிட்டார்.

இந்த கூட்டாண்மை குறித்து கருத்து தெரிவித்த டயலொக் ஃபினான்ஸ் பிஎல்சியின் பிரதம நிறைவேற்று அதிகாரி / பணிப்பாளர் திரு. நசீம் மொஹமட், இலத்;திரனியல் தளத்தில் பதிவுசெய்யப்பட்ட விற்பனையாளர்களுக்குஇ விற்பனையாளர் கடன்களை வழங்க Daraz உடன் கூட்டுசேர்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். சிறிய மற்றும் நடுத்தர விற்பனையாளர்களே இலங்கை பொருளாதாரத்திற்கு முதுகெலும்பாக உள்ளனர். இலங்கையின் பொருளாதாரம் மற்றும் சிறிய மற்றும் நடுத்தர விற்பனையாளர்களின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு ஆதரவளிக்க நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். வணிகங்களுக்கு நிதி தீர்வுகளை வழங்குவதில் எங்களின் விரிவான அனுபவத்துடன், Daraz விற்பனையாளர்களின் வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்."எனக் கூறினார்.

இந்த கூட்டாண்மையானது இலங்கையில் டிஜிட்டல் நிதி மற்றும் இலத்திரனியில் வர்த்தக துறைகளுக்கு ஒரு முக்கியமான மைல்கல்லைக் குறிக்கிறது, ஏனெனில் இது பொருளாதார வளர்ச்சியை உந்துவதற்கும் சமூகங்களுக்கான மதிப்பை உருவாக்குவதற்கும் புத்தாக்க நிறுவனங்களுக்கிடையேயான ஒத்துழைப்பின் திறனை வெளிப்படுத்துகிறது. SMEகளுக்கு குறைந்த வட்டி கடன் அணுகலை வழங்குவதன் மூலம், Daraz மற்றும் Dialog Finance PLC ஆனது டிஜிட்டல் பொருளாதாரம் வழங்கும் ஏராளமான வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள சிறு வணிகங்களுக்கு அதிகாரம் அளித்து, நாட்டின் பொருளாதாரத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு பங்களிக்கிறது. இந்த கூட்டாண்மை ஒத்துழைப்பின் சக்திக்கு ஒரு சான்றாகும், மேலும் சிறிய மற்றும் நடுத்தர தொழில்முனைவோர்களின் வளர்ச்சியை ஆதரிப்பதிலும் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதிலும் மற்ற நிறுவனங்கள் மற்றும் தொழிலற்துறைகளும் இதைப் பின்பற்றுவதற்கு ஒரு எடுத்துக்காட்டு.

Daraz குழுமம் பற்றி
2015 இல் நிறுவப்பட்ட Daraz, பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை, நேபாளம் மற்றும் மியான்மர் ஆகிய நாடுகளில் தெற்காசியாவின் முன்னணி இலத்திரனியல் வர்த்தக  தளமாகும். 500 மில்லியன் மக்கள் வசிக்கும் பிராந்தியத்தில் வேகமாக வளர்ந்து வரும் நுகர்வோர் வகுப்பைச் சென்றடைய, உலகத் தரம் வாய்ந்த சந்தை தொழில்நுட்பத்துடன் 200,000க்கும் அதிகமான செயலில் உள்ள விற்பனையாளர்களுக்கு இது அதிகாரம் அளிக்கிறது. Daraz Express மற்றும் Daraz Pay மூலம், அதன் சந்தைகளில் மிகவும் திறமையான மற்றும் டிஜிட்டல்மயமாக்கப்பட்ட விநியோகம் மற்றும் பணம் செலுத்தும் உட்கட்டமைப்பை இது இயக்குகிறது. 2030 ஆம் ஆண்டுக்குள் 50 மில்லியன் நுகர்வோர் மற்றும் வணிகங்களுக்கு சேவை செய்யும் தெற்காசியாவின் சாம்பியனாக இருக்க வேண்டும் என்பதே னுயசயண இன் நோக்கமாகும். மேலதிக தகவல்களுக்கு, www.daraz.com ஐ பார்வையிடவும்.

Dialog Finance PLC பற்றி
Dialog Finance PLC, “AA" அந்தஸ்து கொண்ட Fitch மதிப்பீட்டைக் கொண்ட ஒரு நிதி நிறுவனமாகும், இது இலங்கையில் மிகவும் மதிக்கப்படும் நிதி நிறுவனமாகும். அதன் அதிநவீன மற்றும் தொழில்நுட்ப அடிப்படையிலான நிதிச் சேவைகளுக்காக இது ஒரு நற்பெயரைப் பெற்றுள்ளது. இந்தத் துறையில் வழிகாட்டியாக, Dialog Finance PLC ஆனது, அதன் வாடிக்கையாளர்களுக்கு நீண்டகால நன்மைகளை வழங்கும் நம்பகமான மற்றும் மாற்றியமைக்கக்கூடிய நிதித் தீர்வுகளை வழங்குவதற்கு தன்னை அர்ப்பணித்துள்ளது. நிறுவனம் 2011 ஆம் ஆண்டின் 42 ஆம் இலக்க நிதி வர்த்தகச் சட்டத்தின் கீழ் இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது, மேலும் இது Dialog Axiata PLC இன் துணை நிறுவனமாக இயங்குகிறது.


Add new comment

Or log in with...