சட்டவிரோதமாக பிரித்தானியா நுழைபவர்கள் தடுத்து வைக்கப்பட்டு நாடு கடத்தப்படுவர்

 - பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்

பிரான்சிலிருந்து அண்டை நாடான இங்கிலாந்திற்கு சட்டவிரோதமாக சுயெஸ் கால்வாய் வழியாக பாதுகாப்பற்ற பயணங்களை மேற்கொண்டுள்ள புலம்பெயர்ந்தோர் நுழைவதை தடுக்கும் வகையில் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் கடந்த புதன்கிழமை பாராளுமன்றத்தில் சட்டமூலமொன்றை தாக்கல் செய்துள்ளார்.

எதிர்காலத்தில் பிரிட்டிஷ் குடியுரிமையைத் கோருவதிலிருந்து தடுக்கப்படுவார்கள். படகுகளை நிறுத்துவது எனது முன்னுரிமை மட்டுமல்ல, அது மக்களின் முன்னுரிமை என்றும் சுனக் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் கூறினார். சட்டவிரோதமாக இங்கு வந்தால் தஞ்சம் கோரவோ குடியுரமை கோரவோ முடியாது என்று அவர் கூறினார்.

சட்டவிரோதமாக பிரித்தானியாவிற்குள் உள்நுழைபவர்களை தடுத்து வைத்து விசாரணைசெய்து ஒரு சில வாரங்களில் நாடு கடத்தப்படவார்கள் என்பதை மக்கள் அறிந்திருக்க வேண்டும்.

இச்சட்டம் நடைமுறைக்கு வந்தால் படகுகளில் சட்டவிரோதமான முறையில் வருவோர் மற்றும் ஆட்கடத்தல்கார்களின் வணிக நடவடிக்கைகளும் நின்றுவிடும் என்று சுனக் கூறினார். இந்த ஆண்டு 40,000 பேர் சுயெஸ் கால்வாயைக் கடக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Add new comment

Or log in with...